25 March 2014

தினமும் 30 நிமிட ஓட்டம் உடல் நலத்தை எப்படி எல்லாம் காக்கிறது !!



மலைப்பாதைகளில் சைக்கிள் ஓட்டுவது, நல்ல பனியிலும் மலை ஏறுதல், பனிச்சறுக்கு விளையாட்டு, சாலைகளில் ரோலர் ஸ்கேட்டிங் செல்லுதல் என்று திறந்த வெளியில் செய்யும் விளையாட்டுக்களில் கிடைக்கும் அனைத்து நன்மைகளும், காலையில் திறந்த வெளியில் ஓடும் அல்லது துரித நடையில் செல்லும் அனைவருக்கும் கிடைக்கும்.

தினமும் அதிகாலையில் குளிர்ந்த காற்று வீசும் போது முப்பதே முப்பது நிமிடங்கள் மட்டும் ஓடுங்கள். அதுவும் இலக்கு நிர்ணயிக்காமல் இன்று அந்தப்பக்கம், நாளை இந்தப் பக்கம் என்று ஓடுங்கள். நகரத்தின் சாயல்கள் இல்லாத இடமாக இருந்தால் மிக நல்லது.

உடற்பயிற்சி நிலையங்களிலும், வீட்டிலும் உடற்பயிற்சி செய்வதை விட இது நல்லது.

பிரிட்டனில் நடப்பதில் அலுக்காத மக்களுக்காக பிரிட்டீஷ் ராம்பிளர்ஸ் உள்ளது. இதில் 1,12,000 பேர் உறுப்பினர்கள், இவர்களில் 42 சதவீதத்தினர் பேர் பெண்கள்.

கடந்த மூன்றாண்டுகளில், இப்படி அதிகாலையில் ஓடவும், நடக்கவும், வந்துள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
காரணம் என்ன? உடல் மெலிவது மட்டுமல்லை; வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ, இப்படி அதிகாலையில் 30 நிமிடங்கள் மட்டும் ஓடுவது அல்லது துரிதமாக நடப்பது உதவுகிறது என்று விளையாட்டுத் துறையைச் சேர்ந்த மனோதத்துவ டாக்டர் டாம்காக்ரில் கூறுகிறார்.

காலையில் சாலைகளில் ஓடுபவர்கள் ஒரு மைல் தூரத்தை (1.6 கி.மீ) நிமிடங்களில் கடந்தால், கால்கள் விரைந்து அழகிய வடிவமாக மாறும். காரணம், இச்செயலால் 337 கலோரி எரிக்கப்படுகிறது.

சிறு பிராயணப் பையை முதுகில் சுமந்துகொண்டு நடந்து சென்றால், தொடைகளும் நுரையீரல்களும் நன்கு பலம் பெறும். இதன் மூலம் 228 கலோரி செலவாகும்.

உள்ளுக்குள் நம்பிக்கையையும் வெளியில் அழகான துடிப்பான தோற்றத்தையும் காலை நேர ஓட்டம் தருவதால், அதற்காக தினமும் 30 நிமிடங்கள் ஒதுக்குங்கள். இதனால் உடல் நலம் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார் ஃபிட்னஸ் நிபுணரான டாக்டர் ஏஜெக்ஸ் ரீஸ்.
என்ன, ஓடத் தயாராகிவிட்டீர்களா?

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home