தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்..
உடலில் உள்ள ஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாக செய்து முடிக்க தண்ணீர் இன்றிமையாதது. நமது உடலில் தண்ணீரின் பங்கு 70% ஆகும். இரத்த ஒட்ட அமைப்பு, செரிமானம், நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பிகள் ஆகியவற்றின் இயக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் மிக சிறப்பாக பயன்படுகிறது. நமது பொதுவான கருத்து தண்ணீர் உடலில் வியர்த்தல், சிறுநீரில் இருக்கும் நச்சுகளை அகற்றுதல், போன்ற வேலைகளை செய்கிறது என்று மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது.
மொத்தமாக ஒரே வரியில் சொல்ல போனால் உடம்பின் செயல்பாட்டையே தண்ணீர் தான் முறையாக இயக்கிகொண்டிருக்கிறது. தண்ணீர் சுவாச குழாயை பாதுகாக்கிறது. நாம் பழங்கள், காய்கறிகள், குளிர்பானம் மூலம் தண்ணீரை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் சுத்தமான தண்ணீர் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். தண்ணீர் அதிகம் பணம் கொடுத்து வாங்கி பருக வேண்டியவற்றை சேர்ந்தது அல்ல. ஆதலால் நிறைய தண்ணீரை பருகலாம். தண்ணீர் பருகுவதோடு மட்டுமல்லாமல் அது சுத்தத்தோடு இருக்கிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.
சரியான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் வறட்சி ஏற்படாமல் தடுப்பதோடு, உடலில் இருக்கும் கழிவுகளான டாக்ஸின்களை வெளியேற்றிவிடலாம். உடலில் தண்ணீர் இல்லாமல் இருந்தால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதேப் போன்று அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தாலும், பிரச்சனைகள் நேரிடும். எனவே ஒரு நாளைக்கு ஒருவர் தன் உடல் எடைக்கு ஏற்ற எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தண்ணீர் குடிப்பது அவசியம்.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home