6 December 2014

என்றும் நினைவில் 6 டிசம்பர்




எங்களின் இடத்தை (பாபர் மசூதியை) பெரும்பான்மை கொண்ட ஒரு கும்பல் இடிக்கிறது...
நாங்கள் உடமையை பறிகொடுத்தோம்...

காவல்துறையும்,ராணுவமும் எங்களை குற்றவாளியாக சித்தரித்தது...
அங்கு நாங்கள் விரட்டியடிக்கப்பட்டோம்...

அரசாங்கம் எங்களை இரண்டாம் தர குடிமகனாக நினைத்தது...
அங்கு நாங்கள் ஒடுக்கப்பட்டோம்...

நீதிமன்றம் கட்டப்பஞ்சாயத்து செய்து எங்களை வஞ்சித்தது...
அங்கு நாங்கள் நசுக்கப்பட்டோம்...

ஆக,ஆயுதம் ஏந்துவதற்கான அத்தனை காரியமும் நடந்தாலும் இன்னும் எங்கள் முஸ்லிம் இனம் ஆயுதத்தை தொடவில்லை...

ஒரு சில உணர்ச்சி வசப்பட்டவர்கள் தவறான முடிவை நோக்கி சென்றாலும் அவர்களை ஒதுக்கி ஓரம்தள்ளி நாங்கள் ஜனநாயக வாதிகள் என்பதை 22 ஆண்டுகளாக நிரூபித்து வரும் ஒரு கூட்டத்தை பார்த்து தீவிரவாதிகள் என்று சொல்வது பெற்ற தாயை வேசி என சொல்வதற்கு சமம் இல்லையா?

ஒருவேளை முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவோ அல்லது இஸ்லாம் தீவிரவாதத்தை போதித்திருந்தாலோ பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஒரு வாரத்தில் இந்தியா என்னும் நாடு உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்காதா?

பத்து கோடி பேரில் இருந்து ஆயிரம் பேர் உயிரை வெறுத்து கிளம்பினால் என்னவெல்லாம் நடந்திருக்கும்?

ஆனால் முஸ்லிம்கள் நாங்கள் இறைவனையும்,இந்த நாட்டின் சட்டத்தையும் மதித்து இன்று வரை அமைதியான முறையில் போராடி வருகிறோம்....

அத்தகைய எங்கள் மக்களுக்கு ஆதரவும்,உற்சாகமும்,உத்வேகமும் கொடுக்க வேண்டிய கடமையும்,கட்டாயமும் நம்மில் அமைதியை நேசிக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது....

அஞ்சுவதும் அடிபனிவதும் ஏக இறைவனுக்கே....
இஸ்லாமியன் இறப்பை எதிர்நோக்கியவன்...


-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home