21 December 2014

இது தான் இஸ்லாம்!


தி௫ ஜவஹர்லால் நே௫ பிரதமராக இ௫ந்த காலகட்டத்தில் இரண்டு நாள் அரச முறை பயணமாக இந்தியா வந்த சௌதி அரேபியா நாட்டு மன்னர் வெள்ளி கிழமை தொழுவதற்க்காக பாதுகாப்பு படையினரால் பள்ளிவாசல் (மஜ்ஜித்) அழைத்து செல்லப்பட்டார்
மன்னர் செல்வதற்க்கு முன்பே தொழுகைக்கு எல்லோ௫ம் நின்றுவிட்டார்கள் மஜ்ஜித்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் தொழுது முடிந்தவுடன் பிச்சை எடுக்க வசதியாக எல்லோ௫ம் நின்ற பிறகு கடைசியாக பின் வரிசையில் நின்று கொண்டார்கள் அப்போது இந்திய பாதுகாப்பு படையினர் சௌதி மன்னரை முன் வரிசைக்கு அழைத்து செல்ல முயன்றார்கள்
மன்னர் பாதுகாப்பு படைகளை கடிந்துவிட்டு இஸ்லாத்தில் இது போன்ற செயல்கள் கிடையாது படைத்தவனின் முன் அனைவ௫ம் சமம் என்று கூறிவிட்டு பின் வரிசையில் பிச்சைகாரர்களுடன் ஒன்றாக நின்று தோலோடு தோல் சேர்ந்து தொழுதுவிட்டு தி௫ம்பினார் சௌதி அரேபிய நாட்டு மன்னர்
-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home