1 January 2013

தீவிரவாத இயக்கமான விடுதலை புலிகளுக்குத் தமிழகத்தில் ஆயுதப் பயிற்சி - அதிர்ச்சி தகவல்..............!!

தீவிரவாத இயக்கமான விடுதலை புலிகளுக்குத் தமிழகத்தில் ஆயுதப் பயிற்சி - அதிர்ச்சி தகவல்..............!!
***************************************************************************************************************************************************************************************************************************************************


இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தமிழகத்தில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்டதாக காவல்துறை வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது,

சுற்றுலா விசா மூலம் தமிழகத்திற்கு வந்த இவர்கள் தங்குவதற்கு இடம், உணவு மற்றும் பயணச் செலவுகள் ஆகியன அனைத்தையும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்,

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் சிலர் இதனை விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்,

மேலும் இதுகுறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,

இரண்டாம் தலைமுறைப் படைப் பிரிவு என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, யாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


செய்தி : இந்நேரம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home