முகம்மத் இப்னு மூசா அல்-குவாரிஸ்மி (Muhammad ibn Mūsā al-Khwārizmī) வரலாறு

முகம்மத் இப்னு மூசா அல்-குவாரிஸ்மி (Muhammad ibn Mūsā al-Khwārizmī) ஒரு பாரசீகக் கணிதவியலாளரும், வானியலாளரும், புவியியலாளரும் ஆவார். இவர் பொகா 780 ஆம் ஆண்டளவில் உஸ்பெக்கிஸ்தானில் உள்ள, தற்காலத்தில் கீவா என அழைக்கப்படுவதும் அக்காலத்தில் குவாரிசும் (Khwārizm) என்று அழக்கப்பட்டதுமான இடத்தில் பிறந்தார். இவ்விடம் அக்காலத்தில் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இவர் கிபி 850 ஆம் ஆண்டளவில் இறந்தார்.
கிபி 820 ஆம் ஆண்டளவில் இவரால் எழுதப்பட்ட இயற்கணிதம் என்பதே ஒருபடிச் சமன்பாடு, இருபடிச் சமன்பாடு என்பவற்றின் முறையான தீர்வுகள் தொடர்பான முதல் நூலாகும்.
பலர் இவரை இயற்கணிதத்தின் தந்தை என்கின்றனர். வேறு சிலரோ இந்தப் பட்டத்தை டயோபந்தஸ் என்பவருக்குக் கொடுக்கின்றனர். எண்கணிதம் என்னும் இவரது நூலின் இலத்தீன் மொழிபெயர்ப்பு 12 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது.
இந்திய எண்கள் பற்றி விளக்கிய இந்த நூல் பதின்ம இட எண்முறையை (decimal positional number system) மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தியது. தொலமியின், புவியியல் என்னும் நூலைத் திருத்தி இற்றைப்படுத்திய இவர் வானியல், சோதிடம் ஆகியவை தொடர்பிலும் நூல்களை எழுதியுள்ளார்.
1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற இயற்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் Algebra என்ற சொல் பிறந்தது.
Thanks:- wikipedia.org

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home