28 February 2013

அன்பான வாழ்க்கைக்கு கொஞ்சம் விட்டுக்கொடுங்களேன்!




அன்பான வாழ்க்கைக்கு கொஞ்சம் விட்டுக்கொடுங்களேன்!



இன்றைக்கு பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கின்றனர். சில தம்பதியர் மட்டுமே வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலானகுடும்பங்களில் கணவனுக்கு அலுவலக வேலை மட்டுமே பெரிதாக இருக்கிறது. எல்லா பொறுப்பையும் மனைவியே சுமக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் கணவனைப் பற்றி ஒருவித அதிருப்தி மனைவிக்கு ஏற்படுகிறது. 

இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவிக்கு இடையே ஒருவித விரோத மனப்பான்மை இருக்கிறது. இது வெளியில் தெரியாது. இருந்தாலும் இருவரின் செயல்படுகளிலும் அது எதிரொலிக்கும். 

இருவருக்கும் இடையே ஒரு இணக்கமான நிலை இல்லாத காரணத்தினால் அடிக்கடி சண்டையும், வீடே போர்களமாகவும் மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினைகளை தீர்க்க கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். 

ஆனால் தம்பதியரிடையே யார் விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதில்தான் பிரச்சினையே. இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையினால் விட்டுக்கொடுத்தல் இல்லாமலேயே பெரும்பாலான தம்பதிகள் ஒரே வீட்டில் வசித்தாலும் ஒருவருக்கொருவர் நடித்துக்கொண்டிருக்கின்றனர். 

உடல்ரீதியாக அவற்றின் தேவைகளுக்காக மட்டுமே இணைகின்றனர். இதனை சேர்ந்து வாழ்க்கின்றனர் என்று கூறுவதை விட ஒரே வீட்டில் இருந்து கொண்டு உணர்வுகள், செயல்களில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழவில்லை. அவரவர் இஷ்டம் போல செயல்படுகின்றனர். சில வருடங்களில் இருவருக்குமிடையே பிரிந்து வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விவாகரத்துதான் என்று முடிவு செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள்தான். எனவே தம்பதியர் இருவரும் இதனை நன்கு சிந்திக்க வேண்டும். 

தம்பதியர் தங்களுக்குள் தெரியாமல் எழும் விரோத மனப்பான்மையை உடனே களைய முற்பட வேண்டும். இருவரும் விட்டுக்கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் குடும்ப வாழ்க்கை தெளிந்த நீரோடைபோல அமைதியாகச் செல்லும். விட்டுக்கொடுத்தல் மட்டுமே குடும்ப அமைதிக்குத் தேவை. குடும்ப முன்னேற்றத்திற்கும் அதுவே அவசியம் என்பதை ஒவ்வொரு தம்பதியரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home