26 February 2013

நீண்ட கால பாவனையின் பொருட்டு செல்பேசியின் பேட்டரியை பராமரிக்கும் சில வழிமுறைகள்!

நீண்ட கால பாவனையின் பொருட்டு செல்பேசியின் பேட்டரியை பராமரிக்கும் சில வழிமுறைகள்! 

மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம்.

*
மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். சார்ஜரும் அப்படியே இருக்க வேண்டும்.

*
அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்து.


*
பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது.

*
அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது.

*
ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும்.

*
பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு பரவும் நிலை ஏற்படும்.

*
பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும்.

*
தொடர்ந்து மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைகிறது எனத் தெரிந்தால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கவும்.

*
சார்ஜ் செய்வதனால் பேட்டரியின் அளவு கூடுகிறதா? உடனே எடுத்துச் சென்று போன் டீலரிடம் தரவும்.

*
எந்த காரணத்தைக் கொண்டும் பேட்டரியைக் கழற்றிப் பார்ப்பதோ அதன் பாகங்களைக் கழற்றி மாட்டுவதோ கூடாது.

*
பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது. இதனால் வெடிக்கும் நிலை ஏற்படலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home