மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள்
மகளுக்கு
தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் - உபயோகமான தகவல்கள்...........!!
தற்போது
பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு
பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை
இப்பொழுது பார்க்கலாம்.
மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை
என்ன ?
பூப்படைந்த
காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன்
மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்.
மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்றவைகளை சாப்பிடவேண்டும்.
ஒரு
நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டியதிருக்கும் ?
சராசரியாக
ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெளியேறும். அப்படிப்பட்ட
தருணங்களில் 4 பேடுகள் வரை பயன்படுத்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக
ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், தொற்று ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.
மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட காரணம் என்ன ?
மூளையில்
உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போக்குக்கு காரணம்.
பெரும்பாலும் இந்த பிரச்சினைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே
போதுமானது. ஆனால் கருப்பையில் ஏற்படும் நோய்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும்.
ஆகவே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.
மாதவிலக்கு
காலத்தில் மார்புகள் கனத்துடன் வலிப்பது ஏன்?
மாதவிலக்கின்
ஒரு வாரத்திற்கு முன்போ, மாதவிலக்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில
நாட்களில் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற
தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
தகவல் : டாக்டர் கே.எஸ்.ஜெயராணி & நன்றி
இன்று ஒரு தகவல்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home