12 March 2013

எலும்பை பலப்படுத்தும் பச்சை பட்டாணி!

எலும்பை பலப்படுத்தும் பச்சை பட்டாணி!
இந்தியாவில் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. உத்திர பிரதேசத்திலும், வங்காள தேசத்திலும் அதிகம் பயிரிடப்படுகிறது.
சுவை: விதை இனிப்பு சுவையுடையது.
செய்கை: பசித்துõண்டி, குளிர்ச்சி உண்டாக்கி, உடல் வலிமை ஏற்றி.
ஊட்டச்சத்துகள்:
பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 8 விதமான உயிர்சத்துக்களும், 6 விதமான தாது உப்புகளும் மற்றும் நார்சத்து, புரதம் அதிகம் உள்ளது. புரதம் அதிகளவாக 15.5 முதல் 39.7 சதவீதம் வரை காணப்படுகிறது.
எனவே வளரும் குழந்தைகளுக்கு இதை உணவாக சமைத்து தர உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஏற்படும்.
100 கிராம் பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள்:
சக்தி 44 கலோரி, நீர்ச்சத்து 75.6 சதவீதம், புரதம் 6.2 கிராம், கொழுப்புச்சத்து 0.4 கிராம், கார்போஹைட்ரேட் 16.9 கிராம், நார்சத்து 2.4 கிராம், சாம்பல் சத்து 0.9 கிராம், கால்சியம் 32 மில்லி கிராம், பாஸ்பரஸ் 102 மி.கிராம், இரும்புசத்து 1.2 மி.கிராம், சோடியம் 6 மி.கிராம், பொட்டாசியம் 350 மி.கிராம், பீட்டாகரோட்டீன் 450 மி.கிராம், தையாமின் 34 மி.கிராம்,ரிபோளேவின் 16 மி.கிராம், நியாசின் 2.7 மி.கிராம், அஸ்கார்பிக் அமிலம் 26 மி.கிராம், விட்டமின்ஏ 680 ஐயு.
மருத்துவ பயன்கள்:
பச்சை பட்டாணியில் நிகோடினிக் அமிலம் என்ற வேதிப்பொருள் இருப்பதால் இது ரத்தத்தில் அதிகளவு கொலஸ்டீரால் இருந்தால் அதை குறைக்கிறது.
பச்சை பட்டாணியில் லேக்டின் என்ற புரதப்பொருள் இருப்பதால் ரத்த சிவப்பு அணுக்கள் உறைந்து ரத்தக் கட்டுகளாக மாறுவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.
பச்சை பட்டாணியில் அதிகளவு விட்டமின்லு, விட்டமின் சி இருப்பதால் எல்லா வகையான புற்று நோய்களால் நாம் பாதிக்காதவாறு பாதுகாக்கிறது.
பச்சை பட்டாணியில் கரையாத நார்சத்து இருப்பதால், கொழுப்பு சத்தை குறைத்து இதயநோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
பச்சை பட்டாணியில் லுõட்டின் என்ற கரோட்டீனாய்டு இருப்பதால் வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படு புரை வளர்தலை குறைக்கிறது.
பச்சை பட்டாணியில் அதிகளவு இரும்புசத்து இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கவனக்குறைவு ஆகியவற்றை போக்குகிறது.
விட்டமின் கே இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தி, பாதுகாக்கிறது.
பச்சை பட்டாணியில் விட்டமின் சி இருப்பதால் ரத்த புற்று, நுரையீரல் புற்று, ஆசனவாய் புற்று போன்ற எல்லா புற்று நோய் வராமல் தடுக்கிறது.
பச்சைபட்டாணியில் உள்ள விட்டமின் பி6 ரத்த குழாய் சுவர் சுருங்குதலைத் தடுத்து, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பச்சை பட்டாணியும் தீரும் நோய்களும்:
பச்சைபட்டாணியில் விட்டமின் பி6, இரும்பு சத்து இருக்கிறது. இவை இரண்டுமே ஹோமோசிஸ்டைன் என்ற ஆபத்தை விளைவிக்கும் வேதிப் பொருள் உடலில் உருவாவதை தடுக்கிறது. இந்த வேதிப்பொருள் தான் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் எலும்பு பலம் குன்றல் ஏற்பட காரணமான மூலப்பொருள். எனனே மாதவிடாய் நின்ற பெண்கள், வயதானவர்கள் பச்சை பட்டாணியை உட்கொண்டால் எலம்பு பலமடையும். மூட்டு வலி, எலும்பு முறிவு வராமல் தடுக்கலாம்.
மேலும் இந்த ஹோமோசிஸ்டைன் ரத்த குழாய் சுவர் சுருங்குதல் ஏற்படவும் காரணமான மூலப்பொருள் எனவே ரத்த குழாய் சுவரை பாதுகாத்து மாரடைப்பை தடுக்க பச்சை பட்டாணியை வாரம் 2 முறை உட்கொள்ள வேண்டும்.
மேலும், ரத்த சோகை தீர, புற்றுநோய் தடுக்க, ரத்தத்தில் உள்ள கொலஸ்டீராலை குறைக்க பச்சைபட்டாணி உதவுகிறது.
பயன்படுத்தும் முறைகள்:
பச்சை பட்டாணியை வேகவைத்து உப்பு, மிளகு சேர்த்து வாரம் 2 முறை வளரும் குழந்தைகளுக்கு தர உடல், மனம் பலப்பட்டு ஆரோக்கியமாக காணப்படுவர்.
பச்சை பட்டாணி, கேரட், புதினா, பீன்ஸ் சேர்த்து வேகவைத்து உப்பு சேர்த்து சூப்பாக சிற்றுண்டிக்கு பதில் குழந்தைகளுக்குத் தரலாம்.
உடல் எடை அதிகரிக்க இதனுடன் உருளைகிழங்கு சேர்த்து சமைத்து தரலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home