மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளைகளை பற்றிய
இன்று மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும்
முறைகளைகளை பற்றிய தகவல்......
அன்றாட வாழ்வில் மொபைல் போன் பயன்பாடு
இன்றியமையாததாக மாறிவிட்டது. மொபைல் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கக் கூட
யாரும் தயாராக இல்லை. அதன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் தேவை. இல்லையென்றால் பல
வித பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும்
முறைகளையும்காண்போம்.
கண்களை காத்துக்
கொள்ளுங்கள்:
-----------------------------------------------------
மொபைல் போன் திரை, கண்களை பாதிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர்
விஷன் சிண்ட்ரோம் (சி.வி.எஸ்.,) எனும் நோய் தாக்குகிறது.
* அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் தினமும் குறைந்தது மூன்று மணி
நேரம் மொபைல் திரையை பார்க்கிறார்.
சி.வி.எஸ்.,சின் அறிகுறிகள்:
-----------------------------------------
கண்கள் வறண்டு
போதல்: சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16-20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் மொபைல்
போன்களை பார்க்கும் போது 6-8 முறைதான் சிமிட்டுகிறோம்.
தலைவலி:
-----------------
கழுத்தை சாய்த்து
வைத்துக் கொண்டு, கண்களை வருத்தி மொபைல் திரைகளை பார்ப்பதால் தலைவலி ஏற்படும்.
பார்வை மங்குதல்:
---------------------------
தொடர்ந்து திரைகளை
பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பார்வை மங்கலாகும். பின் அதுவே நிரந்தரமாகும்.
கிட்டப் பார்வை:
-----------------------
மொபைல் போன்
திரையினால், கிட்டப் பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* குறைபாடை சரி செய்ய கண்ணாடி அணிதல், கான்டாக்ட் லென்ஸ் பொருத்துதல், லேசர் அறுவை சிகிச்சை போன்றவற்றை
மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
* 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கான்டாக்ட் லென்சை
பயன்படுத்துகின்றனர்.
* ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் அமெரிக்கர்கள், லேசர் கண் அறுவை சிகிச்சை செய்து
கொள்கின்றனர்.
கண்களை காக்க...:
-----------------------------
* அடிக்கடி கண் சிமிட்டுங்கள்
* பாதுகாப்புக்காக சன் கிளாஸ் அணியுங்கள்
* விழிகளை சுத்தம் செய்யும் மருந்துகளை பயன்படுத்துங்கள்
காதுகளுக்கு
ஏற்படும் பாதிப்பு:
--------------------------------------------
தொடர்ந்து மொபைலில்
பேசும் 37 சதவீதம் பேருக்கு காதிரைச்சல் நோய் ஏற்படுகிறது. மொபைலில் பேசாத
நேரங்களிலும் காதில் முணுமுணப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
* மொபைலில் பத்து நிமிடத்திற்கு மேலாக தொடர்ந்து பேசுவோருக்கு
காதிரைச்சல் ஏற்பட 71 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.
* காதிரைச்சல் நோயை சரி செய்யவது கடினம்.
காதிரைச்சலை
தவிர்க்க...:
-------------------------------------------
* அதிகப்படியான ஒலியைக் கேட்கக் கூடாது. உப்பு, காபியின் அளவை குறைக்க வேண்டும்.
புகைக்கக் கூடாது. வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை தவிர்க்க வேண்டும்.
* எளிய உடற்பயிற்சி செய்யவும். ரத்த அழுத்தத்தை சீராகவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும்.
கவனமாக இருங்கள்:
-------------------------------
* 40, 50 வயதில் வரும் பிரச்னைகள், தற்போது 15 வயதிலே ஏற்படுகிறது. இதற்கு கம்யூட்டர், மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதும்
முக்கிய காரணம்.
* மொபைலில் "டைப்' செய்யும் போது 91 சதவீதம் பேர் அளவுக்கு அதிகமாக கழுத்தை சாய்க்கின்றனர். இதனால்
கழுத்துவலி ஏற்படுகிறது.
* 10-20 சதவீதம் பேர், மொபைல், கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
* இடைவெளி எடுங்கள்
* "வார்ம் அப்' செய்யவும்
* தினமும் உடற்பயிற்சி செய்யவும்
* அதிகம் நீர் அருந்தவும்
தூக்கத்தை
கெடுக்கும் மொபைல்:
-------------------------------------------------
* மொபைல் போனை உபயோகிப்போருக்கு தூக்கம் வர 6 நிமிடம் தாமதமாகிறது. ஆழ்ந்த
தூக்கத்தையும் பல நிமிடங்கள் மொபைல் போன் தடுக்கிறது.
* பத்து ஆண்டுகளுக்கும் மேல் மொபைல் உபயோகிப்போருக்கு, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளைக் கட்டிகள் ஏற்பட 50 சதவீத வாய்ப்பு உண்டு.
* ஒரு வகை நரம்பு புற்றுநோய், மூளைப்புற்று நோய் ஆகியவை மொபைல்
போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் என கண்டறிப்பட்டுள்ளது.
* அதிகப்படியான வேலைப்பளுவை குறைக்கவும்.
* படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* முடிந்தவரை "ஹெட் போனை' பயன்படுத்தவும்.
* தூங்கும் போது மொபைலை தலை யிலிருந்து குறைந்தது 98 இன்ச் தள்ளி வைக்கவும்.
கவனத்தை சிதற
வைக்கும் மொபைல்
* போதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் பாதிப்பை விட, மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டும் போது, நான்கு மடங்கு அதிகமாக விபத்து ஏற்படும்.
* மொபைலில் "டைப்' செய்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 23 மடங்குக்கும் அதிகமாக விபத்து ஏற்படும்.
விபத்தை
தவிர்க்க...:
-------------------------------
* வாகனத்தை ஓட்டும் போது அவசியமாக பேசியாக வேண்டிய கட்டாயத்தில்
"ஹேண்ட்ஸ் பிரீயை' பயன்படுத்தலாம்.
* டிரைவிங்கின் போது மொபைலை "வைப்ரேஷனில்' வைக்கவும்.
மொபைல் போன் தகவல்
தொடர்பை எளிதாக மாற்றியுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இழப்புகளை தவிர்த்து பயன் பெறலாம்.
கண்களை காத்துக் கொள்ளுங்கள்:
-----------------------------------------------------
மொபைல் போன் திரை, கண்களை பாதிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (சி.வி.எஸ்.,) எனும் நோய் தாக்குகிறது.
* அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் மொபைல் திரையை பார்க்கிறார்.
சி.வி.எஸ்.,சின் அறிகுறிகள்:
-----------------------------------------
கண்கள் வறண்டு போதல்: சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16-20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் மொபைல் போன்களை பார்க்கும் போது 6-8 முறைதான் சிமிட்டுகிறோம்.
தலைவலி:
-----------------
கழுத்தை சாய்த்து வைத்துக் கொண்டு, கண்களை வருத்தி மொபைல் திரைகளை பார்ப்பதால் தலைவலி ஏற்படும்.
பார்வை மங்குதல்:
---------------------------
தொடர்ந்து திரைகளை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பார்வை மங்கலாகும். பின் அதுவே நிரந்தரமாகும்.
கிட்டப் பார்வை:
-----------------------
மொபைல் போன் திரையினால், கிட்டப் பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* குறைபாடை சரி செய்ய கண்ணாடி அணிதல், கான்டாக்ட் லென்ஸ் பொருத்துதல், லேசர் அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
* 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர்.
* ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் அமெரிக்கர்கள், லேசர் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
கண்களை காக்க...:
-----------------------------
* அடிக்கடி கண் சிமிட்டுங்கள்
* பாதுகாப்புக்காக சன் கிளாஸ் அணியுங்கள்
* விழிகளை சுத்தம் செய்யும் மருந்துகளை பயன்படுத்துங்கள்
காதுகளுக்கு ஏற்படும் பாதிப்பு:
--------------------------------------------
தொடர்ந்து மொபைலில் பேசும் 37 சதவீதம் பேருக்கு காதிரைச்சல் நோய் ஏற்படுகிறது. மொபைலில் பேசாத நேரங்களிலும் காதில் முணுமுணப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
* மொபைலில் பத்து நிமிடத்திற்கு மேலாக தொடர்ந்து பேசுவோருக்கு காதிரைச்சல் ஏற்பட 71 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.
* காதிரைச்சல் நோயை சரி செய்யவது கடினம்.
காதிரைச்சலை தவிர்க்க...:
-------------------------------------------
* அதிகப்படியான ஒலியைக் கேட்கக் கூடாது. உப்பு, காபியின் அளவை குறைக்க வேண்டும். புகைக்கக் கூடாது. வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை தவிர்க்க வேண்டும்.
* எளிய உடற்பயிற்சி செய்யவும். ரத்த அழுத்தத்தை சீராகவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும்.
கவனமாக இருங்கள்:
-------------------------------
* 40, 50 வயதில் வரும் பிரச்னைகள், தற்போது 15 வயதிலே ஏற்படுகிறது. இதற்கு கம்யூட்டர், மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதும் முக்கிய காரணம்.
* மொபைலில் "டைப்' செய்யும் போது 91 சதவீதம் பேர் அளவுக்கு அதிகமாக கழுத்தை சாய்க்கின்றனர். இதனால் கழுத்துவலி ஏற்படுகிறது.
* 10-20 சதவீதம் பேர், மொபைல், கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
* இடைவெளி எடுங்கள்
* "வார்ம் அப்' செய்யவும்
* தினமும் உடற்பயிற்சி செய்யவும்
* அதிகம் நீர் அருந்தவும்
தூக்கத்தை கெடுக்கும் மொபைல்:
-------------------------------------------------
* மொபைல் போனை உபயோகிப்போருக்கு தூக்கம் வர 6 நிமிடம் தாமதமாகிறது. ஆழ்ந்த தூக்கத்தையும் பல நிமிடங்கள் மொபைல் போன் தடுக்கிறது.
* பத்து ஆண்டுகளுக்கும் மேல் மொபைல் உபயோகிப்போருக்கு, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளைக் கட்டிகள் ஏற்பட 50 சதவீத வாய்ப்பு உண்டு.
* ஒரு வகை நரம்பு புற்றுநோய், மூளைப்புற்று நோய் ஆகியவை மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் என கண்டறிப்பட்டுள்ளது.
* அதிகப்படியான வேலைப்பளுவை குறைக்கவும்.
* படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* முடிந்தவரை "ஹெட் போனை' பயன்படுத்தவும்.
* தூங்கும் போது மொபைலை தலை யிலிருந்து குறைந்தது 98 இன்ச் தள்ளி வைக்கவும்.
கவனத்தை சிதற வைக்கும் மொபைல்
* போதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் பாதிப்பை விட, மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டும் போது, நான்கு மடங்கு அதிகமாக விபத்து ஏற்படும்.
* மொபைலில் "டைப்' செய்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 23 மடங்குக்கும் அதிகமாக விபத்து ஏற்படும்.
விபத்தை தவிர்க்க...:
-------------------------------
* வாகனத்தை ஓட்டும் போது அவசியமாக பேசியாக வேண்டிய கட்டாயத்தில் "ஹேண்ட்ஸ் பிரீயை' பயன்படுத்தலாம்.
* டிரைவிங்கின் போது மொபைலை "வைப்ரேஷனில்' வைக்கவும்.
மொபைல் போன் தகவல் தொடர்பை எளிதாக மாற்றியுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இழப்புகளை தவிர்த்து பயன் பெறலாம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home