14 March 2013

ஹிஜாபுடைய விடயத்தில் நம் முஸ்லிம்இடத்தில் உருக்கமான வேண்டுகோள்





அடுத்து எமது இலக்கு ஹிஜாப் என்று கூறப்படுவதை நாம் ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக!. முதலில் முஸ்லிம்களாகிய நாம் ஹிஜாபில் தெளிவடைதல் வேண்டும். பெண்கள் முகத்தை மூடுவது தேவையில்லை என்ற கருத்து சிலரிடம் உள்ளது. இவ்விடயத்தில் இமாம்களிடமும் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால், இவையெல்லாம் எமக்கு மத்தியில்தான் இருக்கவேண்டும். பல கருத்துக்கள் இருந்தாலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, பெண்கள் மஹ்ரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் முகத்தை மூடவேண்டும் எனும் கருத்தையே கொண்டுள்ளது என்பதை அதன் பத்வாவின் மூலம் நாம் அறிவோம்.

இந்நிலையில், மாற்றுக் கருத்துகள் எம்மிடம் இருக்கலாம். ஆனால், முகத்தை மூடும் ஒரு பெண்மனியை தனது முகத்தை திறக்கவேண்டும் என கூறுவதற்கு யாருக்கும் எவ்வித அதிகாரமும் இல்லலை. முகத்தை மூடுவது எமது மார்க்கம். அது எமது உரிமை.

எனவே, எதிரிகளுக்கு முன்னால் எம்மை, எமது மார்க்கத்தைக் காட்டிக் கொடுக்கும் வேலைகளில் எமது முஸ்லிம்கள் ஈடுபடமாட்டார்கள் என இந்நாட்டு முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஏற்கனவே இதை நாம் உணர்ந்துவிட்டோம். எமது எதிரிகள் எம்மை பயன்படுத்தியே எமக்கு ஆப்பு வைக்க நாடியுள்ளார்கள். சமகாலத்தில் செய்தும் காட்டியுள்ளார்கள். எனவே, எனது அன்பின் முஸ்லிம்களே, காட்டிக்கொடுப்பின் ரணத்தை இப்பொழுது நாம் மென்றுகொண்டிருக்கின்றோம். வேண்டாம் இனி இந்தக் காட்டிக்கொடுப்பு. எமக்கு ஹிஜாபைப் பற்றிய அறிவு இல்லையென்றால் ஆலிம்களை அணுகுவோம். ஆதாரங்களைக் கேட்போம். தெளிவடைவோம். ஊடகங்கள் மாற்றுக்கருத்துடையவர்களை அணுகலாம். ஜாக்கிரதையாக இருப்போம். செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்போம்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home