ஐன்ஸ்டீனைவிட அதிக ஐ க்யூ கொண்ட இந்திய பெண்!
ஐன்ஸ்டீனைவிட அதிக ஐ க்யூ கொண்ட இந்திய பெண்!
நுண்ணறிவை உலகம் முழுவதும் ஐ.க்யூ என்று
அழைக்கின்றனர். மனிதர்களின் சராசரி ஐ.க்யூ 100. சாதாரணமாக மனிதனுக்கு 85-115 வரை ஐ.க்யூ இருக்கும்.
உலகத்தில் ஒரு சதவிகித
மக்களுக்கு ஐ.க்யூ 150 ஆக உயர்ந்து காணப்படும்.
இந்நிலையில் 12 வயதான நேஹா ராமு என்பவர்
ஆல்பர்ட ஐன்ஸ்டீன் மற்றும் இயற்பியல் துறையில் வல்லுநரான ஸ்டீபன் ஹாகிங்கை விட
அதிக நுண்ணறிவு கொண்டவர் என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது.
அவர் மென்சா தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்று
எல்லோரையும் வியப்பைடைய வைத்திருக்கிறார்.
அதாவது இவர் உலகின் மிகச்
சிறந்த புத்திசாலிகளான, ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாவ்கிங், மைக்ரோசாஃப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் ஆகியோரின் IQ மட்டமான 160 ஐ விடத் தனது வயதில் வெளிக்காட்டக் கூடிய அதிகபட்ச
மட்டத்தை அடைந்ததால் அவர்களை விட இச்சிறுமி அறிவுக்கூர்மை உடையவளாகக் கணிக்கப்
படுகின்றார்.
மேலும் இங்கிலாந்தில்
வசிக்கும் மாணவர்களில் மிகச் சிறப்பான எதிர்காலத்தையுடையவள் இவர் எனவும்
அபிப்பிராயம் வெளியாகியுள்ளது. நேஹாவின் பெற்றோர் இருவரும் டாக்டர்கள் ஆவார்கள்
இவர்கள் இப்போது லண்டனில் வசித்து வந்தாலும் நேஹா. இந்தியாவில் பிறந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது. நேஹா 7 வயதாயிருக்கும் போது இவரின் பெற்றோர்கள் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார்கள்,.
முன்னதாக தான் கல்வி கற்ற
பாடசாலையில் மிகக் அதிக மார்க்குகளைப் பெற்ற நேஹா இங்கிலாந்து பள்ளியில்
சேர்வதற்கான அனுமதிப் பரிசோதனையில் 280- க்கு 280 புள்ளிகள் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்..
இதனையடுத்து இரு வருடங்களுக்குப் பின்னர் மென்சா (Mensa) எனப்படும் ஹைடெக் IQ அறிவுத் திறன் உடையவர்களுக்கான சமூகத்தினால்
நடத்தப்பட்ட Cattell IIIB test பரிசோதனையில் பங்குபெற்று 18 வயதுக்கு குறைவானவர்கள் அடையக்கூடிய அதிக பட்ச புள்ளியான 162 ஐப் பெற்று சாதனை
படைத்தார்..
இதைத் தொடர்ந்து நேஹா SAT எனப்படும் அமெரிக்க A-level பரீட்சையில் 800 இற்கு 740 புள்ளிகள் பெற்றதுடன்
இதன் மூலம் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் மருத்துவத் துறையில் உயர் படிப்பை
மேற்கொள்ளும் விருப்பத்திலும் உள்ளார். நேஹா ஒரு தீவிர ஹரி போர்ட்டர் ரசிகை
என்பதும் நீச்சலில் ஆர்வமுள்ளவள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன் மகள் குறித்து
நேஹாவின் அம்மா கூறுகையில்,எங்களுக்கு நேஹா இவ்வளவு திறமையானவள் என்பது முதலில் தெரியவில்லை. எப்பொழுதுமே
பள்ளியில் நன்றாக படிக்கும் இவள், மென்சா தேர்வில் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் தலைசிறந்த மதிப்பெண்
பெற்று இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. எங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே
இல்லை என்றார்........
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home