இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளிய அமெரிக்கர்கள்...........!!
இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளிய
அமெரிக்கர்கள்...........!!
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி அமெரிக்கர்களிடம்
இந்தியா மற்றும் இந்தியர்கள் குறித்தான நேசம் அதிகரித்து இருப்பதாக தெரிய
வந்துள்ளது.
முக்கிய நட்பு நாடான இஸ்ரேல் மற்றும் பக்கத்து நாடான மெக்ஸிகோவை விட இந்தியாவை
அதிகம் நேசிக்கிறார்கள் என்ற விபரம் அமெரிக்க பத்திரிக்கையுலகில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
கேல்லப் என்ற நிறுவனம்
நடத்திய ஆய்வின்படி, அமெரிக்கர்கள் விரும்பும் நாடுகள் பட்டியலில் முதலாவதாக கனடாவும், இரண்டாவதாக இங்கிலாந்தும்
தேர்வு பெற்றுள்ளன. மேலும், அமெரிக்காவின் முக்கிய வணிக நாடுகளான ஜெர்மனியும், ஜப்பானும் மூன்றாம்
நான்காம் இடத்தை பெற்றுள்ளன. ஐந்தாம் இடத்தை பிரான்ஸ் பெற்றுள்ளது.
ஆனால் இஸ்ரேலையும்
மெக்ஸிகோவையும் பின் தள்ளி இந்தியா ஆறாம் இடத்தை பெற்றுள்ளது ஆய்வாளர்களிடையே
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அரசியல்
ஆய்வாளர், உலக அரங்கில் இந்தியா
குறித்த எண்ணம் மாறி வருவதும், வியாபார ரீதியாக வலுவான நாடாக இந்தியா வளர்ந்து வருவதும் அமெரிக்கர்கள் அதிகம்
நேசிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார்.
ஒன்பதாம் இடத்தை
ரஷ்யாவும், பத்தாம் இடத்தை சீனாவும் பெற்றுள்ளன. இருபதாம் இடத்தை பாகிஸ்தானும், பட்டியலில் ஆக கடைசி
இடங்களை வட கொரியா மற்றும் ஈரான் பெற்றுள்ளன.
சங்கை ரிதுவான் கருத்து :
உலகமே காரி உமிழும்
விஷப்பாம்பான இஸ்ரேலை தனது நேச நாடாக அமெரிக்க வைத்து கொண்டால் அமெரிக்கா
மிகப்பெரிய பின் விளைவுகளை சந்தித்ததை கடந்த கால வரலாறு பறைசாற்றும்,
இனிமேலாவது விஷப்பாம்பு
இஸ்ரேலுடன் அமெரிக்கா கூட்டு வைப்பதை தவிர்த்து விட்டு இந்தியா போன்ற நாடுகளோடு
கூட்டணி வைத்தால் நிச்சயம் அது அமெரிக்காவுக்கும் நன்மை பயக்கும், உலக நாடுகளுக்கும் நன்மை
பயக்கும்
------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சூழ்ச்சி யாக கூட இருக்காலாம்
இரண்டு பெரும் திருட்டு பசங்க தான் எல்லாவற்றிக்கும் திட்டம் தீட்டி கொடுப்பது
மொசாத் இஸ்ரேலின் உளவு துறை தான் .
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home