அகட்டி...!!!
அகட்டி...!!!
லட்ச தீவுகளில் உள்ள தீவுகூட்டத்தில் உள்ள ஒரு சிறிய தீவு.
சுமார் பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட இச்சிறு தீவில் வசிப்பவர்கள் அனைவரும் இசுலாமியர்கள்.
இத்தீவில் இதுவரையிலும்
கொலை, கற்பழிப்பு, திருட்டு என்று நடந்ததே இல்லை என்பதும் சிறைசாலைகளில் ஒரு கைதி கூட இல்லை என்பதும் இத்தீவின் சிறப்பம்சமாகும்.
வீடுகளை பூட்டிவிட்டு வெளியே செல்லும் பழக்கம் இல்லை என்று கூறும் அகட்டி தீவுவாசிகள்..எங்கள் மக்களிடத்தில் விவாகரத்து என்பது கூட மிகவும் ஆபூர்வங்களில் ஆபூர்வமாக நடக்கும் ஓர் நிகழ்வு என்றும் சமீபத்திய வருடங்களில் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக எங்களுக்கு நினைவு இல்லை என்றும் கூறுகின்றனர்.
மாலை வேளைகளில் அக்கம் பக்கத்து வீட்டார்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி நல்ல செய்திகளை மட்டும் பேசி பொழுதை போக்குவோம் என்றும் கூறும் அகட்டி மக்கள் எங்களின் இத்தைகய உயரிய மாண்பிற்கு முறையான இறை வழிபாடே எங்களை நல்வழி படுத்துகிறது என்கின்றனர்.
இத்தீவில் 16 ம் நூற்றாண்டில் மரத்தால் கட்டப்பட்ட பழமையான முகையதீன் மசுதி ஒன்றும் உள்ளது.
இத்தீவில் மலையாளம் முதன்மை மொழியாகவும் இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் பேசப்படுகிறது.
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து 460 கடல் மைல் தொலைவில் உள்ள இத்தீவிற்கு சென்று வர கப்பல் விமான போக்குவரத்து சேவைகள் உண்டு.
கப்பலில் சென்றால் இரண்டு தினங்கள் பிடிக்கும்.
உலங்கு வானூர்த்தியும் வாடகைக்கு அமர்த்தி பயணம் மேற்கொள்ளலாம்.
இத்தீவிற்கு அந்நியர்கள் யாரும் பிரவேசிப்பது என்பது அத்தகைய எளிதான காரியமும் அல்ல.
லட்சதீவுகளின் ஆட்சி அதிகாரியிடம் முன் கூட்டி வாங்கிய அனுமதி கடிதமும் தீவுவாசிகளின் ஓப்புதலும் இருந்தால் மட்டுமே அகட்டி தீவிற்கு செல்ல முடியும்.
இறைவனின் ஆசிர்வதிக்கப்பட்ட தீவு, கடவுள் நம்பிக்கையில் எந்தவொரு சமரசத்திற்கும் இடமின்றி முழுமனதாக இறைவனிடத்தில் அடி பணியும் போது மனிதர்களின் மாண்புகள் மெய் ஒழுகத்தின் நறுமணத்தை மட்டும் வீசும் தென்றலாக மட்டுமே இருக்கும் என்பதற்கு அகட்டி இசுலாமிய தீவு ஓர் சிறந்த எடுத்துகாட்டு !!!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home