நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்...?
நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்...?
கோடையில் கவனம் தேவை:
கோடை வெயில் வந்தாலே அதை சமாளிப்பதற்கு பெரும் சிரமப்படுகிறோம்.
அதே நேரத்தில் இந்த கோடை காலத்தை தங்களுக்கு வசந்த காலமாக்கி பணம் சம்பாதிக்கும்
ஒரு கும்பலும் களம் இறங்கி விடுகிறது. இந்த கும்பல் போலியான குளிர்பானங்கள், தண்ணீர், மோர் ஆகியவற்றை
தயாரித்து புழக்கத்தில் விடுகின்றன.
சுட்டெரிக்கும்
வெயிலில் அலைபவர்கள் தாகம் தணிக்க தண்ணீர் பாக்கெட்டுகளையோ, குளிர்பானங்களையோ வாங்கி பருகுவார்கள்.
தாகத்தில் இருக்கும் போது அந்த குளிர்பானம் ஒரிஜினலா..? போலியா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை.
ஆனால் இந்த மாதிரி குளிர்பானங்களால் உடலுக்கு கேடு என்பதை பொது மக்கள் உணர
வேண்டும்.
உணவு கலப்பட
தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதை தடுப்பதற்காக 13 குழுக்களாக பிரிந்து நகர் முழுவதும் சோதனை
நடத்தி வருகிறார்கள். தேனாம்பேட்டை, தி.நகர், உஸ்மான் ரோடு பகுதிகளில் நடத்திய சோதனையில் 200 பாட்டில் போலி குளிர்பானங்கள், 1875 பாக்கெட் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும்
மோர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
போலியான
குளிர்பானங்கள் ஏதாவது ஒரு முன்னணி நிறுவன பெயர் கொண்ட பாட்டில்களில் அடைத்து
விற்கப்படுகிறது. ஆனால் இதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, கலந்துள்ள பொருட்கள் பற்றிய எந்த தகவலும்
இல்லை. இதே போல் தண்ணீர் பாக்கெட்டுகளும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமலும், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி
இல்லாமல் இருந்தது.
இவ்வாறு
சுகாதாரமற்ற முறையினால் தயாரிக்கப்படும் தண்ணீர் மற்றும் குளிர் பானங்களால்
உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் கடை
வியாபாரிகளிடமும் இந்த மாதிரி தரமற்ற குளிர்பானம், தண்ணீர் பாக்கெட்டுகளை விற்பது
தண்டனைக்குரிய குற்றம் என்று அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
பல கடைக்காரர்கள்
கூறும்போது, "கம்பெனி எங்கு இருக்கிறது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது.
விலை குறைவு, லாபம் அதிகம் என்பதால் வாங்கி விற்கிறோம்'' என்றனர்.
பொதுமக்கள் இந்த
மாதிரி குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கும்போது அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, ஐ.எஸ்.ஐ. முத்திரை ஆகியவை இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்கும்படி அதிகாரிகள்
கேட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்களே உஷாராக இருங்கள்... இல்லாவிட்டால்
"குடிக்கும் நேரத்தில் தாகம் தீரும். கூடவே நோயும் வரும்".
""ஜாக்கிரதை"".
அஷ்ரஃப்
நன்றி:- மாலை
மலர்....
கோடை வெயில் வந்தாலே அதை சமாளிப்பதற்கு பெரும் சிரமப்படுகிறோம். அதே நேரத்தில் இந்த கோடை காலத்தை தங்களுக்கு வசந்த காலமாக்கி பணம் சம்பாதிக்கும் ஒரு கும்பலும் களம் இறங்கி விடுகிறது. இந்த கும்பல் போலியான குளிர்பானங்கள், தண்ணீர், மோர் ஆகியவற்றை தயாரித்து புழக்கத்தில் விடுகின்றன.
சுட்டெரிக்கும் வெயிலில் அலைபவர்கள் தாகம் தணிக்க தண்ணீர் பாக்கெட்டுகளையோ, குளிர்பானங்களையோ வாங்கி பருகுவார்கள். தாகத்தில் இருக்கும் போது அந்த குளிர்பானம் ஒரிஜினலா..? போலியா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை. ஆனால் இந்த மாதிரி குளிர்பானங்களால் உடலுக்கு கேடு என்பதை பொது மக்கள் உணர வேண்டும்.
உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதை தடுப்பதற்காக 13 குழுக்களாக பிரிந்து நகர் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். தேனாம்பேட்டை, தி.நகர், உஸ்மான் ரோடு பகுதிகளில் நடத்திய சோதனையில் 200 பாட்டில் போலி குளிர்பானங்கள், 1875 பாக்கெட் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் மோர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
போலியான குளிர்பானங்கள் ஏதாவது ஒரு முன்னணி நிறுவன பெயர் கொண்ட பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஆனால் இதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, கலந்துள்ள பொருட்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை. இதே போல் தண்ணீர் பாக்கெட்டுகளும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமலும், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்தது.
இவ்வாறு சுகாதாரமற்ற முறையினால் தயாரிக்கப்படும் தண்ணீர் மற்றும் குளிர் பானங்களால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் கடை வியாபாரிகளிடமும் இந்த மாதிரி தரமற்ற குளிர்பானம், தண்ணீர் பாக்கெட்டுகளை விற்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
பல கடைக்காரர்கள் கூறும்போது, "கம்பெனி எங்கு இருக்கிறது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. விலை குறைவு, லாபம் அதிகம் என்பதால் வாங்கி விற்கிறோம்'' என்றனர்.
பொதுமக்கள் இந்த மாதிரி குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கும்போது அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, ஐ.எஸ்.ஐ. முத்திரை ஆகியவை இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்களே உஷாராக இருங்கள்... இல்லாவிட்டால் "குடிக்கும் நேரத்தில் தாகம் தீரும். கூடவே நோயும் வரும்". ""ஜாக்கிரதை"".
அஷ்ரஃப்
நன்றி:- மாலை மலர்....
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home