மிஸ்டுகால் சபலத்தால் கப்பலேறிய மானம்
மிஸ்டுகால் சபலத்தால் கப்பலேறிய மானம்
செல்போனில் முன்பின் தெரியாத பெண்ணின் குரலை கேட்டாலே மயங்கி விடுகிறார்கள் ஆண்கள். அந்த மயக்கத்தில் தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு சென்றிருக்கிறார் திருமணமான ஒருவர். அவரை அடித்து உதைத்து நகையை பறித்துள்ளது ஒரு கும்பல்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன். கல்குவாரி ஊழியர். ஒரு மாதம் முன்பு இவருக்கு ஒரு மிஸ்டுகால் வந்தது. அறிமுகம் இல்லாத எண். அந்த எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது ஒரு பெண் “நான் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி. உங்களது குரல், தமிழ் பேச்சு நன்றாக உள்ளது. உங்களை போல் ஒருவரைதான் திருமணம் செய்ய விரும்புகிறேன். கோவை வாருங்கள்’’ என கூறியுள்ளார். நம் குரல் அவ்வளவு இனிமையாகவா இருக்கிறது என மகிழ்ச்சியடைந்த பாலமுருகன் கோவை குற்றாலம் சென்றுள்ளார். கோவை குற்றாலம் சோதனை சாவடியில் எனது நண்பர்கள் உங்களை என்னிடம் அழைத்து வந்து சேர்ப்பார்கள்’’ என கூறினார் அந்தப் பெண். சோதனைசாவடியில் நின்றிருந்த 2 பேரை பாலமுருகன் சந்தித்தார். அவர்கள் அவரை ஆள்அரவம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றனர். “உன்னிடம் பெண் குரலில் பேசியது நாங்கள்தான். பொம்பள கூப்பிட்டா தூத்துக்குடியில இருந்து வந்துருவியா? உனக்கெதுக்கு நகை?’’ என்று கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின், அரை பவுன் மோதிரத்தை பறித்தனர்.
அவர்களிடம் சரமாரியாக அடி, உதை வாங்கிய பாலமுருகன், “மோதிரத்தை மட்டும் திருப்பி கொடுங்கள், மனைவி திட்டுவா’’ என்று கெஞ்சியுள்ளார். “சரி மோதிரத்தை கொடுக்கிறோம். ரூ.10 ஆயிரம் கொடு’’ என்று கேட்டுள்ளனர். “என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. நண்பரை பணம் கொண்டு வர சொல்கிறேன்’’ என்று கூறியுள்ளார். கல்லூரியில் படிக்கும் நண்பரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் பொதுமக்களை திரட்டி பதுங்கியவாறு வந்து 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீஸ் விசாரணையில், பெண் குரலில் பேசியவர் கெம்பட்டி காலனி சுந்தரம், மற்றொருவர் செம்மேட்டை சேர்ந்த அருண்குமார் என்று தெரிந்தது. சுந்தரத்தின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். பிரசவ செலவுக்காக அவர் நகை பறித்தார் என்றும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி வாலிபருக்கு அறிவுரை கூறி அனுப்பினர். நண்பர் பொதுமக்களை திரட்டிக் கொண்டு வந்ததால் மோசடிகள் சிக்கிவிட்டார்கள். நகையும் திரும்ப கிடைத்துவிட்டது. இல்லாவிட்டால்? நகையும் போய், மானமும் போயிருக்கும். கண நேர சபலத்தால் வந்த விளைவுதான் இத்தனையும்.
அஸ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home