21 April 2013

உறவினர்களிடையே திருமணம் பந்தம் செய்யலாமா?


உறவினர்களிடையே திருமணம் பந்தம் செய்யலாமா?




"உறவினர்களிடையே திருமணம் பந்தம் செய்து கொள்வதால் ரத்தக்கசிவு நோய் ஏற்படுகிறது, நமது ஊரில் ஒரு பழக்கம் இருக்கிறது சொத்து, சொந்தம் வீணாக போய் விடக்கூடாது என்று சொந்தத்தில் முடிப்பது. 

சொந்தத்துக்குள் தொடர்ந்து திருமண பந்தம் செய்பவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது. பார்வை குறைவு, இரத்த கசிவு போன்ற நோய்களை உண்டாக்குகிறது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

நமது உடலில் ரத்தம் ஓடிக் கொண்டே இருக்கும்,. உடலில் எங்காவது அடிபட்டால் ரத்தம் அதிகமாக வெளியேறாமல் இருக்க நமது இரத்த உறையும் தன்மையால் அது தடுக்கப்படும். அதே ரத்தக்கசிவு நோய் பாதித்தவர்களுக்கு, இந்த உறையும் தன்மை இருக்காது.

இந்நோய் மரபு ரீதியானது, இது. ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு பல் ஈறுகளில் ரத்தம் கசியும். சிறு காயம் ஏற்பட்டாலும் பெருமளவு ரத்தம் வெளியேறும். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும். 

இதற்கு உறவினரிடையே திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கருவிலேயே இந்நோய் பாதிப்பு உள்ளதா என கண்டறியலாம். தகுந்த உடற்பயிற்சி, முறையான சிகிச்சை மூலம் இந்நோய் பாதித்தோரும் நீண்ட காலம் வாழலாம். நெருங்கிய உறவு முறையில் தொடர்ந்து திருமண பந்தம் செய்வதை தவிர்த்து கொள்வது நல்லது. 

நன்றி- மதன்

அஷ்ரஃப் 


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home