பொறியியல் பாடப்பிரிவுகள்- விரிவான அலசல்-1
பொறியியல் பாடப்பிரிவுகள்- விரிவான அலசல்-1
வளர்ந்து வரும் மாணவர்கள் சமுதாயத்தை ஓர் ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற்றுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி களமிறங்கி உள்ளது. இதற்க்கு உயர்கல்விகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனடிப்படையில் மாணவர்களின் உயர்கல்வியானது, வேலை வாய்ப்புள்ள படிப்பாக அமையுமானால் அதன் மூலம் தானும், தன்னைச் சார்ந்த குடும்பமும் வளம் பெறுவதுடன் சமுதாயமும் உயர்வடைகின்றது. ஒரு மாணவன் தகுந்த படிப்பின் மூலம் சரியான தன்னுடைய எதிர்காலத்தினை அமைக்கும்பொழுது, தவறான வழிகளில் செயல்படுவதற்கான கூறுகள் அனைத்தும் தடைபடுகின்றது. அதற்காக தான் இந்த அலசல்.
கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைகள்.
பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் உள்ள சந்தேகம் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கும் தகவல் தொடர்பு பொறியியலுக்கும் இடையே உள்ள வேறுபாடு. கம்யூட்டர் சயின்ஸ் (CSE) என்பது தனிப்பட்ட கம்யூட்டர் மற்றும் புரோகிராமிங் பற்றிய அறிவை பெறுவதாகும். ஆனால் தகவல் தொடர்பு (IT) என்பது கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சேர்ந்த பிரிவாகும்.
Computer Science Engineering (CSE)
கணிப்பொறி அறிவியல் பொறியாளர்கள், கம்ப்யூட்டிங் துறையின் பல அம்சங்களில், அதாவது, தனிப்பட்ட மைக்ரோப்ராசசர்(Micro processor) வடிவமைப்பு, தனிப்பட்ட கணினி மற்றும் சூப்பர் கணினி முதல், சர்க்யூட் டிசைன் மற்றும் மென்பொருள் எழுதுதல்(Software writing) போன்ற பணிகள் வரை ஈடுபடுகிறார்கள். மேலும் அவர்கள், ரோபோடிக் ஆராய்ச்சியிலும் ஈடுபட தகுதியுள்ளவர்கள். அந்தப் பணியானது, மோட்டார்கள் மற்றும் சென்சார்கள் போன்ற எலக்ட்ரிகல் அமைப்புகளை கட்டுப்படுத்தல் மற்றும் கண்காணித்தலுக்காக பயன்படுத்தும் டிஜிட்டல் அமைப்புகளை சார்ந்தது.
உலகளவில் கம்யூட்டர் நுழையாத இடம் உண்டா என்றால் அதற்கு இல்லை என்றுதான் பதில். அந்த அளவிற்கு கம்யூட்டர் நமது வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. இத்துறை பொறியாளர்கள் பலர் வளர்ந்த மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் பல லட்சங்களை ஆண்டு வருமானமாகப் பெற்றுக்கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா, கனடா உட்பட வளர்ந்த நாடுகள் இந்திய பொறியாளர்களின் திறமைகளை தங்களின் தேவைகளுக்கு வரவேற்பதுடன் அவர்களின் வளர்ச்சி தங்கள் நாட்டை பாதிக்கும் என்பதனையும் அவர்கள் அறியாமல் இல்லை.
நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள், அதற்கு தகுந்தாற்போல் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் பக்குவம் செயல்பாடுகள். Software Engineering, Information Technology, Network Engineering and Computer and Communication போன்ற முதுகலை பொறியியல் படிப்புகளையும், TCS, Wipro, Infosis, CTS, IBM, HP, HCL போன்ற (MNC) கம்பெனிகளில் வேலை பெறும் வாய்ப்புகளுடன் இத்துறை மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரி சேர்க்கையில் ECE, Mechanical துறைக்கு அடுத்தபடியாக விளங்குவதுடன் பெண்களால் அதிகம் விரும்பப்படுவதும் CSE துறையாகும். தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 562 கல்லூரிகளில் சுமார் 51,000 இடங்கள் உள்ளன.
Information Technology (IT)
சமீப காலத்தில் தொடங்கப்பட்ட பிரிவாக இருந்தாலும் தொடங்கப்பட்ட ஆண்டுகளில் மாணவர்கள் மத்தியில் மிக அதிக அளவிலான வரவேற்பைப் பெற்று, அசைக்க முடியாத துறையாக வலம் வந்து, அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் தன்னுடைய முழு பலத்தையும், இழந்து மாணவர்கள் மனதில் கடைசி இடத்தை பிடித்திருக்கின்றது. இதன் மூலம் இத்துறை பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றாற்போல் மாறுவதால் இத்துறை மீது மாணவர்களின் தேர்வும் மாறிக்கொண்டே வருகின்றது.
மாணவர்களுக்கு எங்களுடைய அறிவுரை என்னவென்றால் ஒருபோதும் தங்களின் சேர்க்கை பெறும் ஆண்டின் நிலையை வைத்துக்கொண்டு தங்களின் தேர்வை மேற்கொள்ளக்கூடாது. ஏன் என்றால் அவர்கள் வேலைபெற முயற்சிப்பது அடுத்த நான்கு ஆண்டிற்குப் பிறகு தான்.
தமிழ்நாட்டில் கடந்த 2007ம் ஆண்டு 95% மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட துறையானது, 2009ம் ஆண்டில் வெறும் 42% மாணவர்கள் மட்டுமே இத்துறையை தேர்வு செய்தனர்.
Information Technology, System Engineering and Communication & Networking போன்ற புதுமையான முதுகலை பொறியியல் படிப்புகளும், படிப்பு முடிவதற்குள் ஏதேனும் ஒரு தகவல் தொடர்பு துறையில் வேலை வாய்ப்புகளும் இத்துறை மாணவர்களின் அசையாத நம்பிக்கைகளாக உள்ளன.
Computer Science மற்றும் Information Technology பாடத்திட்டத்தின் சுருக்கம்
இந்த 2 துறைகளின் பாடத்திட்டங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு மாணவர் தெளிவாக அறிந்துகொள்வது சற்று சவாலான விஷயம்தான். IIT, IIIT மற்றும் NIT போன்ற முதல்நிலை உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட பல முக்கிய நிறுவனங்களில், Computer Science அல்லது Information Technology ஆகிய 2 பாடத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றுதான் இருக்குமே தவிர இரண்டும் இருக்காது. இதன்மூலம் என்ன தெரிகிறதென்றால், இரண்டுக்குமே சொல்லிக்கொள்ளுமளவு வித்தியாசம் இல்லை என்பதுதான்.
எனவேதான் ஒரேமாதிரியான இரண்டு பாடங்களை அந்த கல்வி நிறுவனங்கள் தங்களிடம் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. சில கல்லூரிகள் மட்டுமே இந்த இரண்டு பாடங்களுக்கிடையே மிகக் குறைந்தளவு வித்தியாசத்துடன் இரண்டையும் வழங்குகின்றன.
உங்கள் முடிவு
Computer Science படிப்பதா? அல்லது Information Technology படிப்பதா? என்ற குழப்பம் ஒரு மாணவருக்கு ஏற்பட்டால், அந்தப் படிப்பை விட, கல்லூரி எது என்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிறந்த கல்லூரியில் இந்த இரண்டில் எது இருந்தாலும் தாராளமாக சேர்ந்து விடலாம். அதேசமயத்தில் ஒரு சிறந்த கல்லூரியில் இந்த 2 படிப்புகளுமே இருந்தால், எதைப் படிக்கலாம் என்பதில் உங்களுக்கு அதிக குழப்பம் ஏற்படலாம். மேலே சொன்ன விளக்கங்களை வைத்து, எந்த பணிகளின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளதோ, அந்தப் படிப்பையே தேர்வுசெய்து கொள்ளுங்கள்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.
- அஜ்மல்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home