தூங்கும் முறைகள் (ஒழுங்குகள்)
எல்லா நிலையிலும் அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும் உரியது!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ...
தூங்கும் முறைகள் (ஒழுங்குகள்)*****************************உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.(அல்குர்ஆன்:78:9)
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதன் எல்லா விஷயங்களிலும் இவ்வாறுதான் நடக்க வேண்டும். இதுதான் நன்மையானது என்று கூறுகிறது.
அதே போல் தூக்கத்தின் போது எவ்வாறு இருக்க வேண்டுமென்பதையும் அதனால் என்ன நன்மை என்பதையும் கூறுகிறது.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும் மரணிக்காதவற்றை உறக்கத்திலும் கைப்பற்றுகிறான்.
எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதை தன கை வசத்தில் வைத்துக்கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு வைக்கிறான்.(அல்குர்ஆன்:39:42)
மூவரை விட்டும் எழுதுகோல் உயர்த்தப்படுகிறது:(தீமைகள் எழுதப்படுவது இல்லை)
1) தூங்குபவர்* 2) பருவமடையா சிறுவர்.* 3 ) பைத்தியம்.
தூங்குவதற்கு முன்னால் நாம் செய்ய வேண்டியவை:
நீ படுக்கைக்கு செல்லும் போது தொழுகைக்கு செய்வது போல் உளூ செய்து கொள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)அறிவிப்பவர்: பராவு பின் ஆஸிப் (ரலி)
உங்களில் ஒருவர் படுக்கையிலிருந்து எழுந்த பிறகு மீண்டும் படுக்கைக்கு வந்தால் தனது விரிப்பை மூன்று முறை உதறிக் கொள்ளட்டும்.
ஏனெனில் அவர் இல்லாத போது எதுவெல்லாம் வந்துள்ளது என்பதை அவர் அறியார்.(நூல்: புகாரி -முஸ்லிம் )
ஒவ்வொரு இரவும் நபி (ஸல்) படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இரு உள்ளங்கைகளையும் விரித்து வைத்துக் கொண்டு அதில் ஊதுவார்கள்.
பின்பு குல்ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் (F)பலக், குல்அவூது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதுவார்கள்.
பிறகு தன் உடலில் தம் கைகளைக் கொண்டு தடவ முடிந்த பகுதிகளில் முழுதும் தடவுவார்கள். தலை, முகம் உடலின் முன்பகுதியிலிருந்து தடவ ஆரம்பிப்பார்கள்.இது போல் மூன்று முறை செய்வார்கள். (முஸ்லிம்)
தமக்கு ஒரு பணியாள் தேவை என அலி (ரலி)அவர்களும், பாத்திமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவ்ர்களிடத்தில் வந்து கேட்ட போதுஅண்ணல் நபியர்கள் அவர்களிடத்தில் கூறினார்கள்.
நான் உங்களுக்கு பணியாளரை வழங்குவதை விட சிறந்த ஒன்றைக் கற்றுத்தரட்டுமா?என்று கேட்டார்கள்.
அதாவது, நீங்கள் தினமும் படுக்கைக்கு செல்லும் முன்பு சுபுஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹு அக்பர் 33 தடவையும் தஸ்பீஹ் செய்யுங்கள் இது உங்களுக்கு பணியாளரை விடவும் சிறந்ததாகும் என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம)
நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் மஸ்ஜிதில் மல்லாந்து படுத்திருந்தார்கள்.அவர்களின் ஒரு கால் மற்றோரு கால் மீது போட்டிருந்தார்கள். (நூல்: புகாரி -முஸ்லிம்)
நீ படுக்கைக்கு சென்றால் உளூ செய்து வலது பாகத்தின் மீது ஒருக்கணித்துப் படுப்பாயாக என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் :பராவு பின் ஆஸிப் (ரலி)(நூல்: புகாரி -முஸ்லிம்.)!
குப்புறப்படுப்பதை அல்லாஹ் வெறுக்கிறான்.
நான் மஸ்ஜிதில் குப்புறபடுத்திருந்தேன். அப்போது யாரோ ஒருவர் தம் காலால் என்னை அசைத்தார்.
பின்னர் அல்லாஹ் வெறுக்கும் செயல் இது என்று கூறினார்கள்.உடன் விழித்துப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள்.என என் தந்தை திஹ்பா (ரலி) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)அறிவிப்பவர்: யாஸ் பின் திஹ்பா (ரலி)
நீ படுக்கைக்கு செல்லும் போதுஆயத்துல் குர்ஸியை ஒதுவாயானால் காலை வரையில் அல்லாஹ்வின் சார்பில் ஒரு பாதுகாப்பாளர் ஏற்படுத்தப்பட்டிருபார்.
மேலும் ஷைத்தான் உன் அருகில் கூட வர மாட்டான்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரவில் தங்கள் படுக்கைக்கு வந்தால்,தங்கள் கன்னத்திற்குக் கீழ் கை வைத்துக் கொள்வார்கள். பின்னர் கூறுவார்கள்.
அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா
பொருள்: இறைவா! உன் திருப்பெயர் கொண்டு உறங்குகிறேன்.
உன் திருப்பெயர் கொண்டே விழித்தெழுவேன் எனக் கூறுவார்கள். (நூல்: புகாரி)
அதே போல்..தூக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும்..
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப அத மா அமாத்தனா வ இலைஹின்னுஷூர் என்ற துஆவை ஓதுவார்கள்.
பொருள்: எங்களை உறங்கச் செய்த பின் விழித்தெழச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அவன் பக்கமே ஒதுங்குதல் உள்ளது என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்:ஹுதைபா (ரலி) (புகாரி)
உங்களில் எவரேனும் தூக்கத்திலிருந்து எழுந்தால் தமது கரத்தை மூன்று முறை கழுவாதவரைதண்ணீர் பாத்திரத்துக்குள் கையை விட வேண்டாம்.
ஏனெனில் அவரது கை இரவை எங்கு கழித்ததென அவர் அறிய மாட்டார்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா. புகாரி -முஸ்லிம்.
சிறு வயதிலேயே துஆக்களை மனனம் செய்யுமாறு குழந்தைகளுக்கு போதியுங்கள்.
இஸ்லாமிய மான்புகளோடும், ஒழுக்கங்ளோடும் பிள்ளைகளை வளர்க்க நாடும் பெற்றோர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
தூங்குவது என்பது எல்லா மனிதருக்கும் பொதுவான ஒரு தேவைதான் என்றாலும்,
அதிலும் இறைவனை சார்ந்து அவனருளை பெற வேண்டும் என இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது.
சிறு சொற்களிலும் நன்மைகள் கொட்டிக்கிடப்பதை நாம் மறக்க வேண்டாம்.
நன்மையை நாடும் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். மன்னிப்பவன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home