ஆபாச படங்களுக்கு அடிமையாகி போகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஆபாச படங்களுக்கு அடிமையாகி போகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஆபீஸ் மற்றும் வீடுகளில் இன்டர்நெட்டில் ஆபாச படம்
பார்ப்பதற்கு அடிமையாகும் ஆண்களால் பல குடும்பங்கள் பாழாகின்றன என்ற பகீர் தகவல் தெரியவந்துள்ளது.சென்னையை சேர்ந்த இன்ஜினியர் சேகர் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
ஆபீஸ் மற்றும் வீடுகளில் இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்ப்பதற்கு அடிமையாகும் ஆண்களால் பல குடும்பங்கள் பாழாகின்றன என்ற பகீர் தகவல் தெரியவந்துள்ளது.சென்னையை சேர்ந்த இன்ஜினியர் சேகர் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ரமா,சென்னையில் ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியர். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகிறது. இந்நிலையில், விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் சேகர் மனு தாக்கல் செய்தார். ‘செக்ஸ் உறவில் என் மனைவிக்கு நாட்டம் இல்லை. இதனால் என் திருமண வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது’ என்று மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து
குடும்ப நல கோர்ட்டுக்கு ரமா அழைக்கப்பட்டார். கணவரின் குற்றச்சாட்டை கடுமையாக
மறுத்த அவர் இதுபற்றி தீர விசாரிக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். இதை
தொடர்ந்து, உளவியல்
நிபுணர்கள் கொண்ட குழுவை நீதிபதி நியமித்து இப்பிரச்னை குறித்து விசாரிக்க
உத்தரவிட்டார். உளவியல் நிபுணர்கள் விசாரித்தனர்.அப்போது இன்டர்நெட்டில் தினமும்
விதவிதமான ஆபாச படங்களை விரும்பி பார்க்கும் சேகர், மனைவியுடன் செக்ஸ் வைத்துக்
கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்தது.
இதை
மறைப்பதற்காக, மனைவிக்கு
செக்ஸில் ஆர்வம் இல்லை என்று பொய் புகார் கொடுத்தார் என்றும் தெரிந்தது. இதைத்
தொடர்ந்து விசாரித்த போது இன்டர்நெட் ஆபாச படங்களுக்கு அடிமையான பல இளைஞர்களால்
பெண்களின் திருமண வாழ்க்கை பாதித்துள்ளது என்றும் உளவியல் நிபுணர்கள்
தெரிவித்தனர்.
இதுகுறித்து
குடும்பநல கோர்ட்டில் 3 ஆண்டுகளுக்கு
மேலாக நீதிபதியாக இருக்கும் ராஜா சொக்கலிங்கம்,”இன்டர்நெட்டில் ஆபாச படங்கள்
பார்க்கும் ஆண்கள் தங்களது மனைவியை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும்
கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் சமீப காலமாக அதிக அளவில் வருவது
அதிர்ச்சி அளிக்கிறது. ஆபாச படங்களில் இருப்பது போல நடைமுறை வாழ்க்கையிலும்
மனைவியிடம் செக்சை எதிர்பார்த்து அது கிடைக்காத ஆத்திரத்தில் அவர்களை கொடுமைப்படுத்துகின்றனர்
அல்லது விவாகரத்து கேட்டு மனு போடுகின்றனர். அபூர்வமான வழக்குகளில் மனைவி ஆபாச
படங்களுக்கு அடிமையாகி கணவனை கொடுமைப்படுத்துவதும் நடந்துள்ளது.
இவ்வாறு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் கூறினார்.
இவ்வாறு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் கூறினார்.
யாருக்கும்
தெரியாமல் தியேட்டருக்கு சென்று காலை காட்சி பார்ப்பது, டெக் வாடகைக்கு எடுத்து
நள்ளிரவில் நண்பர்களுடன் சேர்ந்து ‘பிட் வீடியோ கேசட்’ பார்ப்பது என்ற காலம்
மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஆபாச படங்கள் பார்க்க கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஸ்மார்ட்போன் போதும். இவற்றுக்கு
ஆண்கள் அடிமையாவதால் பல குடும்பங்கள் பாழாகிறது என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் அலுவலக நேரத்தில் ஆபீஸில் உள்ள கம்யூட்டரில் பலான படங்களைப் பார்ப்பவர்கள்
கிட்டத்தட்ட 72 சதவீதம்
என்றும் தெரிய வருகிறது.
ஆனாலும், ஆபாச படம் பார்த்து செக்ஸ் கொடுமை
செய்யும் கணவர்கள் பற்றி புகார் கூறும் மனைவிகள் மிகவும் சொற்பம் என்றே தெரிகிறது.
பல பெண்கள் வேறு வழியின்றி, அவமானம்
கருதி வெளியே சொல்ல தயங்கி சகித்துக் கொள்கின்றனர். இத்தகைய ஆண்களுக்கு உள்ளார்ந்த, உளவியல் ரீதியான சிகிச்சை தேவை.
ஆபாச படம் பார்ப்பதில் ஏற்படும் ஒருவித சுகத்துக்கு ஆண்கள் அடிமையாவதால் பணி உள்பட
வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடியாது. நண்பர்களை விட்டு விலகுவார்கள்.
தூக்கம், உணவைக்கூட
இழக்க நேரிடும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
இதற்கிடையில்
ஆபாச வெப்சைட்களை தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில்
கமலேஷ் வஸ்வனி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி
மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஷ்ரஃப்
நன்றி
ஆந்தையார்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home