இராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர்............
இராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் தொடுத்திருந்த காலத்தில், சரியான காரணமின்றி ஒரு லட்சம் இராக்கியர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; குறிப்பாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலமான 2004 முதல் 2009 வரை இப்படுகொலைகள் அரங்கேறியுள்ளன என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜாலியன் அசான்ஜ் தெரிவிக்கிறார்.
இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் விக்கிலீக்ஸிடம் உள்ளன. இவர்களில் 80 விழுக்காட்டினர் சிவிலியன்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய அசான்ஜ், இந்த ஆவணங்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மானேங்க் கடுமையான குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
‘அல்காயிதா’ அமைப்புக்கு உதவியதாகவும் எதிரிக்குத் துணைபோனதாகவும் அவ்வீரர்மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அரசின் செயலை, சர்வதேச அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதாக அசான்ஜ் கண்டித்தார்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home