15 June 2013

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் முஸ்லிம் பெண்


எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் முஸ்லிம் பெண் 
என்றொரு செய்தியை சில நாள்களுக்கு முன்பு படித்தேன். 


இப்போது பாகிஸ்தான் விமானப் படையில் 
முதல் பெண் விமானியாக ஆயிஷா பாரூக் 
தேர்வாகியுள்ளார் என்னும் செய்தி வந்துள்ளது.


மலை உச்சியில் ஏறட்டும், 
விண்ணையும் தாண்டி பறக்கட்டும்..
வேண்டாம் என்று சொல்லவில்லை.


ஆனால் பெண்களின் செயற்களம் மலை உச்சியோ 
விண்வெளியோ அல்ல. குடும்பம்தான்.


பெண்களின் இயல்புக்கு ஒவ்வாத பணிகளில் எல்லாம் 
பெண்கள் ஈடுபடுவதை அல்லது திணிப்பதைப் 
பெண் முன்னேற்றம்என்று சொல்ல முடியுமா?


அமெரிக்க இராணுவத்திலும் 
இந்தியக் கடற்படையிலும் நடைபெறும் 
பாலியல் வக்கிரங்கள் பற்றியெல்லாம் படிக்கும்போது 
இராணுவப் பணிகளில் பெண்கள் இணைவதை 
மனம் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறது.
என்ன சொல்கிறீர்கள்?
-
சிராஜுல்ஹஸன்

அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home