10 August 2013

ஜெயா பிரதமரானால்..!


*ரிலையன்சை எல்லாம் பின்னுக்குத் தள்ளி டாஸ்மாக் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகும்

*
சிகரெட் விற்பனைக்கும் அரசே தனி கடைகளை ஆரம்பிக்கும், வியாபாரம் பிச்சுக்கும்

*
பாராளுமன்றம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாய்க் காட்சியளிக்கும் பின்னே 273 எம்.பிக்கள் குப்புற விழுந்து விழுந்து எழுந்தால்?

*
ஒரு எம்.பி கூட சுதந்திரமா இருக்க முடியாது. ஏன்னா அவரு அன்னிக்கி பதவில இருக்காரா? இல்லையானு எவனுக்கும் தெரியாது, 8 மணி ஜெயா நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கனும்

*
குண்டு வெடிப்பைவிட பிரதமர் அறிக்கை அரசு அலுவலர்களுக்கு மிகப்பெரிய குண்டாய் இருக்கும்.

*
அவதூறு வழக்கிற்கென்றே தனி நீதிமன்றம் அமையும், அத்துனை அவதூறு வழக்குகள் போடப்படும், சில அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தின்மீதேகூட போடப்பட்டிருக்கலாம்.

*
ஒல்லியாய் இருப்போர்மீதும் குண்டர் சட்டம் பாயும். பழைய ஆட்சியின் பாதி எம்.பிக்கள் நிலஅபகரிப்பு சட்டத்தில் ஜெயிலில் மண் எண்ணிக்கொண்டிருப்பர், எண்ணி முடிச்சாதான் ஜாமீன். சிலர் "நிலா" அபகரிப்பு சட்டத்திலும்கூட கைது செய்யப்படலாம்.

*
பிரதமர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தாலே எம்.பிக்கள் மேசையை தட்டுவார்கள், அவர் கொட்டாவி விட்டால்கூட மேசையை ஒருசேர தட்டி நன்றி தெரிவிப்பர். சிறப்பு விருந்தினராய் வரும் ஜப்பான் பிரதமர் அதை ஏதோ மியூசிக் பிரோக்கிராம் என நினைத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு.

*
உலக சேட்டிலைட் மேப்பில் இரவில் இந்தியா தனியா கருப்பா தெரியும், வெளிச்சம் இருந்தாத்தானே? தீபாவளி பரிசாக மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆட்டாங்கல்லும், அம்மிக்கல்லும் பரிசாய்க் கிடைக்கும்.

*
இந்தியாவில் மின்சாரம் இல்லாததற்கு காரணம் முன்பிருந்த மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சிதான் என்று பிரதமரின் 5-ம் ஆண்டின் ஆட்சியில் அறிக்கை வரும்.

*MGR
சிலைகள் பறக்கும் குதிரையின் விரிந்த இறக்கைகளுடன் நாடு முழுவதும் அமைக்கப்படும்,

*
பாராளுமன்றம் குழந்தைகள் நல மருத்துவமனையாகும்.

*
சீனாவுக்கு ஒரு பயணம் போனால் அவர்கள் 200 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும். இப்படியே ஒரு 100 தடவ பயணம்போய் சீனா வளச்சியை இப்படியும் தடுக்கலாம்

*
ராஜஸ்தானின் அஜ்மீர் நகரத்தின் 33-ம் வார்டின் முக்குச்சந்தில் வசிக்கும் ஒரு தொண்டர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால்கூட அதை பிரதமரே அறிவிப்பார்.

*
சுதந்திர தினத்துலகூட பாரத தாய்க்கு பதிலாக அம்மாவின் புகைப்படம் போட்டு வாழ்த்த வயதில்லை போஸ்டரெல்லாம் கலக்கும். போஸ்டர் அடிச்சவன் வயசு 95 ஆக இருக்கும்.

*
பெட்ரோல், டீசல், பால் விலைகள் ஒரே நாளில் ரூ.100 ஏற்றப்படும். பிறகு 5 ஆண்டுகளுக்கு விலையேற்றமே இருக்காது. இளிச்சவாய மக்களும் 10 நாட்கள் போராடிவிட்டு பின் மறந்துவிடுவார்கள்.

*
ரவுடிக பங்களாதேஷ்க்கோ, பாகிஸ்தானுக்கோ ஓடிட்டாங்கன்னு ஒரு அறிக்கை வரும்

#
வேறு என்னவெல்லாம் நடக்கும் தோழர்களே..உங்கள் கருத்தை பதியலாம்

சூர்யா பார்ன் டு வின் - பேஸ்புக்
வாயிலாக






இப்பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல...



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home