4 August 2013

பாராளுமன்றம் – மும்பை தாக்குதல்கள்:வலுப்பெறும் சந்தேகம்!


பாராளுமன்றம்மும்பை தாக்குதல்கள்:வலுப்பெறும் சந்தேகம்!

புதுடெல்லி:2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தாக்குதலும், 2001-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதலும் மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகளே திட்டமிட்டு நடத்தியதாக வெளியான தகவல் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகளின் உதவியுடன் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களைப்போலவே, நாட்டை ஆளும் அரசுகளும் தங்களது கேவலமான லட்சியங்களை நிறைவேற்ற இம்மாதிரியான தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன என்பது .பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவின் கூற்றில் இருந்து தெரியவருகிறது.

பாராளுமன்ற தாக்குதல் குறித்து பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், மனித உரிமை ஆர்வலரான நந்திதா ஹக்ஸர் உள்ளிட்டோர் ஏற்கனவே எழுப்பிய சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் சதீஷ் வர்மாவின் கூற்று அமைந்துள்ளது. சவப்பெட்டி ஊழலில் பா.. தலைமையிலான தே..கூ அரசு வெட்கி தலைகுனிந்த வேளையில்தான் பாராளுமன்ற தாக்குதல் அரங்கேறியது.

பாராளுமன்ற தாக்குதல் அரங்கேறுவதற்கு முன்பே இத்தகையதொரு சம்பவம் நடக்க இருப்பதாக அரசும், போலீசும் தெரிவித்திருந்தன. 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயும் பாராளுமன்ற தாக்குதல் விரைவில் நடக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பின்னரும் வெடிப்பொருட்களுடன்தீவிரவாதிகள்எனக் கூறப்படுவோர் வந்த கார் பாராளுமன்ற வளாகத்திற்குள் எவ்வாறு நுழைந்தது? என்ற கேள்வியை அருந்ததி ராய் எழுப்பியிருந்தார். இவ்வழக்கில் அநியாயமாக தூக்கிலிடப்பட்டு கொலைச் செய்யப்பட்ட அப்ஸல் குரு, சரணடைந்த போராளி என்றும், இவர் ஜம்மு-கஷ்மீரில் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்று நீதிமன்றமே உறுதிச் செய்திருந்தது. போலீஸின் கண்காணிப்பில் இருந்த ஒரு நபர், எவ்வாறு நாட்டின் உயர் பாதுகாப்புடன் கூடிய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டமுடியும்? என்ற கேள்வியும் எழுந்திருந்தது.தாக்குதலின் போது மோதலில் கொல்லப்பட்டதாக தீவிரவாதிகள் என்று அரசு கூறும் ஐந்து நபர்கள் குறித்த விபரங்களை இதுவரை அரசால் அளிக்க முடியவில்லை என்பதும் பாராளுமன்றத்தாக்குதலில் நிலவும் மர்மமாகும். பாராளுமன்ற தாக்குதலில் பங்கேற்றார் என்று கூறப்படும் நபரை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை என்னிடம் கஷ்மீர் டி.எஸ்.பி தவீந்தர் சிங் ஒப்படைத்தார் என்ற அப்ஸல் குருவின் வாக்குமூலம் குறித்தோ, அப்ஸல் குருவும், தவீந்தர் சிங் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்தோ இதுவரை போதிய விசாரணைகள் நடைபெறவில்லை. போலீஸ் மற்றும் .பி.யின் இன்ஃபார்மராக செயல்பட்டவர் அப்ஸல் குரு ஆவார்.

மஹராஷ்ட்ரா .டி.எஸ் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து எழுந்த சந்தேகங்கள், சதீஷ் வர்மாவின் கூற்றைத்தொடர்ந்து வலுப்பெறுகிறது. மும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இண்டலிஜன்ஸ் பீரோ மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கரங்கள் உள்ளதாக ஏற்கனவே மஹராஷ்ட்ரா மாநில முன்னாள் .ஜி எஸ்.எம்.முஸ்ரிஃப் தகவல் வெளியிட்டிருந்தார். கர்கரேயைக் கொன்றது யார்? என்ற நூலில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. புல்லட் ப்ரூஃப் (குண்டு துளைக்காத ஆடை) ஜாக்கெட் அணிந்த பிறகு கர்கரேயின் உடலில் தோட்டாக்கள் எவ்வாறு துளைத்தன? என்று கர்கரேயின் மனைவி நீதிமன்றத்தில் அளித்த மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார். இச்சம்பவத்தில் முக்கிய ஆதாரமான இந்த ஜாக்கெட் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போனது.

2008-
ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி இரவு 11.24 மணியளவில் தீவிரவாதிகளை நேருக்கு நேராக சந்திப்பதற்காக காமா ஹஸ்பிடல் வளாகத்திற்கு சென்ற கர்கரேக்கு ராம்பவனுக்கு முன்னால் வைத்து தோட்டா தாக்கியது.கர்கரேயுடன் அசிஸ்டெண்ட் கமிஷனர் அசோக் காம்தே, சீனியர் இன்ஸ்பெக்டர் விஜய் சாலஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஆனால், போலீஸ் குறிப்பேட்டின் (மானுவல்) படி இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சென்றிருக்க வாய்ப்பில்லை. கூடுதல் போலீஸ்காரர்கள் தேவை என்று கூறி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கர்கரே அளித்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒரு மணிநேரம் கழியும் வரை கர்கரே மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளின் அருகில் போலீஸ் வராதததும் மர்மமாக உள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இரண்டு நிமிட தொலைவிலேயே உள்ள இடத்தில் தான் கர்கரேயும் இதர போலீஸ் அதிகாரிகளும் சுடப்பட்டு கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home