இளமை தோற்றத்தை தக்கவைக்கும் 14 உணவுகள்.......!!
து அனைத்தும் வயிற்றுக்கு தான். எனவே உண்ணும் உணவில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து கொள் வது மிகவும் அவசியம்.
ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்து உள்ளது. ஒரே ஒரு வைட்டமினின் சத்து மட்டும் உடலுக்கு போதாது. எல்லா வித சத்துக்களும் உடலுக்கு அவசியம். அதில் வைட்டமின் `சி' கண்ணிற்கு நல்லது, ஓமேகா3 இதயத்திற்கு நல்லது என ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு சக்தியை உடலுக்கு தந்து, மனதுக்கும், உடலுக்கும் தேவையான பலத்தை அளிக்கின்றது.
எனவே அளவான உணவை தேவையான சத்துக்களுடன் எடுத்துக் கொண்டாலே, ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வாழ முடியும். குறிப்பாக நோய் இல்லாமல் இருந்தாலே, இளமையுடன் காட்சியளிக்க முடியும். சரி, இப்போது உடலில் ஏற்படும் நோய்களைத் தடுத்து, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் சில உணவுகள் பற்றிப் பார்ப்போமா!
1.ஆப்பிள்/திராட்சை/செர்ரி/ஸ்ட்ராபெர்ரி :
மேற்கூறியவற்றில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. மேலும் இந்த பழங்களில் எலாஜிக் அமிலங்கள் உள்ளன. இவை புற்றுநோய் வருவதை தடுக்கின்றது.
2.முட்டைக்கோஸ் குடும்பம் :
முட்டைக்கோஸ் குடும்பம் என்று சொல்லப்படும் முட்டைக் கோஸ், காலிஃபிளவர், ப்ராக் கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் இந்த காய்கறிகளில் பீட்டா கரோட்டின், மற்றும் ஐஸோதியோசயனைடுகள் (குறிப்பாக ப்ரோக்கோலியில் காணப்படும்) புற்றுநோயை தடுக்கின்றது.
3.மிளகாய்/மிளகுத்தூள் :
மிளகாய் வயிற்றை சேதப்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது நிபுணர்கள் மிளகாயில் இருக்கும் லேசான எரிச்சல் வயிற்றின் பாதுகாப்பிற்கு உதவுகின்றது என்று கூறுகின்றனர். இந்த காரம் புண் மற்றும் செல் பாதிப்பை தடுக்க உதவும்.
மேலும் இவற்றில் வைட்டமின் `சி' மற்றும் நோயெதிர்ப்பு எதிர்ப்பு சக்தி தரும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அதிலும் குடைமிளகாயின் உள் இருக்கும் ஒரு வித காரம் தரும் பொருளில் ஆக்ஸிஜனேற்றம் தரும் தன்மை உள்ளது என்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது.
4.சிட்ரஸ் பழங்கள் :
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் புற்றுநோயை தடுக்க உதவும். இவற்றில் இருக்கும் வைட்டமின் `சி', லிமொனின் போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை பாதித்து அந்நோய் தாக்காமல் காக்கின்றது. மேலும் சருமத்தை பொலிவோடு, இளமையுடன் வைத்துக்கொள்கிறது.
5.பூண்டு மற்றும் வெங்காயக் குடும்பம் :
பூண்டில் உள்ள அல்லிசின், மோசமான கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைத்து, ரத்தத்தின் நல்ல கொழுப்புத் தன்மையை அதிகப்படுத்தி, உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றது. இதனால் இவை ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இது ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. வெங்காயம், வெங்காயத்தாள், சின்ன வெங்காயம் போன்றவற்றில் ஆலியம் என்ற தன்மை உள்ளது. இவை இதயம் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் நல்லது.
6.க்ரீன் டீ :
க்ரீன் டீயில் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உள்ளது. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால்கள் புற்றுநோயை தீர்க்க உதவுகின்றது என்று கூறப்படுகின்றது. இது இதயத்திற்கும், கல்லீரலுக்கும் மிகவும் நல்லது.
7.கீரைகள் :
பசலைக் கீரை, வெந்தயக்கீரை, லெட்யூஸ், பார்ஸ்லி, செலரி போன்றவற்றில் உள்ள பீட்டா கரோட்டின் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
8.ஓட்ஸ் :
இதயத்திற்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. அதற்கு தினமும் ஒரு கப் ஓட்ஸ் எடுத்துக் கொண்டால், சக்கரை அளவை கட்டுப்படுத்தி, இதயத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
9.மீன் :
கானாங்கெளுத்தி, சால்மன், சூரை, மத்தி, கடல் மீன், ஏரி, ட்ரௌட் போன்ற மீன்களில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ரத்த உறைவைப் போக்கும். ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் கீல்வாதம், சரும அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் கொலிட்டஸ் போன்ற அழற்சி ஏற்படுத்தும் நோய்களில் இருந்து நம்மை காக்கும்.
10.ஆலிவ்/ரேப்சீடு எண்ணெய் :
அதிகமாக எண்ணெய் எடுத்து கொள்வது கெடுதல் தான். ஆனால் பதப்படுத்தப்பட்ட எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக மோனோ அன்சாச்சுரேட்டர் ரக எண்ணெய் மிகவும் நல்லது. இது ஆலிவ் மற்றும் ரேப்சீடு எண்ணெயில் அதிகமாக உள்ளது.
11.பப்பாளி/கேரட் :
மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிற காய்கறிகளான பூசணி, மாம்பழம், ஆப்ரிக்காட், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை விட, பப்பாளி மற்றம் கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது.
12.சோயா பொருட்கள் :
சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் மற்றும் டோஃபு உணவானது குறைந்த கொழுப்பு கொண்ட கால்சியம் நிறைந்த உணவாகும். ஜெனிஸ்டின் நிறைந்த சோயா தயாரிப்புகள் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை வாய்ந்தது.
13.தக்காளி :
புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது தக்காளி. லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டு போன்றவை புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதில் கவுமாரிக் மற்றும் கோல்ரோஜினிக் அமிலம் அதிகமாக இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கின்றது.
14.தயிர் :
ஆய்வு ஒன்றில் பாக்டீரியா அதிகம் உள்ள தயிரானது செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று கூறுகின்றது. அதுமட்டுமின்றி, இதில் கால்சியம் அதிக உள்ளதால், இந்த உணவு ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக பயன்படுகின்றது. எனவே மேற்கூறிய அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் நோய்கள் தாக்காமல், சருமமும் நன்கு இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home