8 September 2013

இந்தியாவில் தினமும் 4,700 குழந்தை மரணங்கள்! - அதிர்ச்சித் தகவல்! ! ! !



இந்தியாவில் நாள் தோறும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 4,700 குழந்தைகளுக்கும் மேல் மரணித்து வருவதாகவும்,
குழந்தைகளுக்கான மருத்துவத் திட்டங்களில் இந்தியா மிகவும் பின்தங்கி 136வது இடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

World Vision India
என்னும் அமைப்பு நடத்திய ஆய்வில் இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு, 7க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர் என்றும் 1,000 பெண்களில் 86 பேர் வரை, 15-19 வயதுக்குள் குழந்தை பெற்றுக்
கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த ஆய்வில் மேலும், "இந்தியர்கள் தங்கள் சேமிப்பில் 62 சதவீதத்தை, மருத்துவத்துக்காகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில், 176 நாடுகளில் இந்தியா 135 இடத்தில் உள்ளது. மருத்துவத்தில், பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி பெரிய அளவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home