20 September 2013

மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்கு டாட்டா வந்து விட்டது ஸ்டெம் செல் சிகிச்சை..



மேட்ரிட், ஸ்பெயின் : மாற்று கல்லீரல், மாற்று இருதயம் என்று மாற்று உறுப்புகள் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் இனி பழையதாகி விடும். எந்த உறுப்பை இழந்தாலும் சம்பந்தப்பட்டவர் உடலிலேயே ஸ்டெம் செல்எடுத்து, சம்பந்தப்பட்ட உறுப்பை உருவாக்கி பொருத்தும் நவீன எளிய சிகிச்சைகள் வரும் காலம் நெருங்கி விட்டது.

ஸ்பெயின் நாட்டில் மேட்ரிட் நகரில் உள்ள தேசிய புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மைய தலைவர் மேனுவல் செர்ரானோ தலைமையிலான மருத்துவ நிபுணர் குழு இந்த நவீன சிகிச்சைக்கான ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளது.

இது குறித்து செர்ரானோ கூறியதாவது: ஸ்டெம் செல் என்பது நம் உடலில் உள்ளவை தான். கரு உருவாகும் போதே இந்த செல்கள் உருவாகின்றன. இவை தான் கை, கால், தசை, எலும்புகள், ரத்தக்குழாய்கள் என்று பல்வேறு உறுப்புகளாக மாறி செயல்படுகின்றன. உறுப்புகள் பழுது பட்டால், அதற்கு மற்றவர்களிடம்தான் தானமாக பெற வேண்டும்.கல்லீரல் போன்ற மாற்று உறுப்புகள் மற்றவர்களிடம் இருந்து பெறுவது என்பது அரிதான செயல்.

யார் உதவியையும் நாடாமல் இருக்க ஸ்டெம் செல் தொழில்நுட்பம் தான் சிறந்தது. இது மாற்று உறுப்பு அறுவைசிகிச்சைக்கு மாற்றாக வரப்போவது உறுதி. குறிப்பாக புற்றுநோய் செல்களை நீக்கி, புதிய செல்களை வளர்த்துக்கொள்ள ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மிகுந்த பலன் அளிக்கும் என்பது உண்மை என்றார்.

எக்ஸ்ட்ரா தகவல்

நம் உடலுக்கு மிக முக்கியமானது உயிரணு. இது தான் செல் எனப்படுகிறது. இதில் இருந்து தான் எல்லா உறுப்புகளும் உருவாகின்றன.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home