மப்பு மால் !
ஷாப்பிங்
மால்களில் 'டாஸ்மாக்’
கடைகள் திறக்கத் திட்டம் என்ற செய்தி இப்போது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை
வார்த் திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு
என்று பொருள். இப்போது தான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய்
விளங்கப்போகிறது. இதன்
சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே
இந்த சிறப்புப் 'பார்’வை.
டாஸ்மாக்ல இருக்கிறப்போ போன் வந்தா என்ன சொல்றதுனு எல்லோ ரும் பயப்படுவாங்க, யோசிப்பாங்க... இப்போ அந்தக் கவலை இல்ல... ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு சொல்லிக்கலாம்!
ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப் படுகிறது. ஆங்கிலம் தெரியவில்லை என்னும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு, அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, அத்தகையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாத மாய் அமையும்!
மால்களில் ஷாப்பிங் செய்யும்போது, நாம் தாக வேட்கையைத் தணிக்க டாஸ்மாக்கை நாடுவதால், நெடு நேரம் ஷாப்பிங் செய்யும் மனைவி, நம்மை விரைவாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் கவனமாய் இருப்பார். இது குடும்பத்தின் பொருளாதரம் மேம்பட வழி வகுக்கும்!
ஷாப்பிங் மால்களில் பணம் தண்ணியா செலவழியும். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை!
டோர் டெலிவரி எல்லாப் பொருட்களுக்கும் இருக்கும் இந்தக் கால கட்டத்தில், நிதானம் இழந்த குடிமகன்களை அவர்கள் வீட்டிலேயே சேர்க்கும் வகையில் ஒரு வசதியை அறிமுகப்படுத்தினால், அது எல்லோரிடமும் இந்தத் திட்டத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அப்படி மட்டும் செய்துவிட்டால் 'பார்’ போற்றும்! என்னே அரசு 'பார்’ என்று ஊர் போற்றும்!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home