19 September 2013

செல்போனை விரைவாக சார்ஜ் செய்ய டிப்ஸ்! ! ! !



செல்போன விரைவா சார்ஜ் செய்ய


1.
கம்ப்யூட்டரிலோ,
அல்லது காரிலோ சார்ஜ்
செய்வதை தவிர்த்துவிடலாம்.

2.
நேரடியாக அவுட்லெட்டில்
(Outlet)
இணைத்து சார்ஜ்
செய்யுங்கள்.

3.
செல்போன் சார்ஜ்
ஆகும்போது செல்போனில்
வேறு எதையும் செய்யாதீர்கள்.

4. GPRS, GPS
வசதிகளை நிறுத்திவிடுங்கள்.

5.
வைபரேட் மோடில் (Vibrate
Mode)
இருந்தால் நார்மல் மோடில்
செல்போனை வையுங்கள்.*****************

6.
மொத்தமாக செல்போனை "ஆஃப்"
செய்து சார்ஜ் செய்தால்
மேற்குறிப்பிட்டதைவிட விரைவாக
உங்கள் செல்போன் சார்ஜ் ஆகும்.

நன்றி - Yushuf Abdullah.
******************************************************************************************
******************************************************************************************


அடிமையாகாதே! ! !

*******************







போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில் வீழ்ந்திடுவாய்!

மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு அலைந்திடுவாய்!

சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை இழந்திடுவாய்!

பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை இழந்திடுவாய்!

புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை
இழந்திடுவாய்!

தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!

புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை இழந்திடுவாய்!

கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில் வீழ்ந்திடுவாய்!

உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே நீ இழந்திடுவாய்!

அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!!

(
ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home