ரூப் கன்வர்..
சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஆங்கிலேய அரசு கடுமையான சட்டங்களால் தடுத்திட்டபோதும், ஆங்கிலேய ஆட்சிக்கு பின்னாலும் இது தொடரவே செய்தது. இந்துமதத்தின் பெயரிலான இந்த பித்துகுளித்தனத்துக்கு கடைசி பலி இவள்.
1987, இந்த அழகு தேவதைக்கு அப்போது வயது பதினெட்டு. ஜெய்ப்பூரில் உள்ள ராஜபுத்திர வம்சத்து அரச குடும்ப மருமகள். அதுதான் அவள் செய்த பாவம். கணவன் எதிர்பாராத விதமாக இறந்துவிட, அவள் கணவனுக்கு பாடை தயாராகிறது. அருகிலேயே அவளுக்கும் ஒன்று கட்டப்படுகிறது. அவளை அலங்கரித்து தயார்படுத்துகிறார்கள். 4-9-1987 அன்று அவளது கணவனுக்கு பின்னால், அவளையும் மற்றொரு பாடையில் அமரவைத்து ஊர்வலமாக தூக்கி செல்கிறார்கள். வீதியின் இரு புறங்களிலும் கூட்டம். கதறியழுதபடி இரு கைகளாலும் மக்களை பார்த்து கும்பிட்டபடியே பயணிக்கிறாள். அவள் அழுவது, கணவனுக்காக அல்ல, பழைமைவாத நம்பிக்கையால் அநியாயமாக பறிக்கப்படவிருக்கும் தன் உயிருக்காக.
அவள் கூப்பாடை புரிந்துகொள்ளாத மடையர்களும், புரிந்துகொண்டும் மரபை காக்க மனிதத்தை கொல்ல துணிந்த மனித மிருகங்களும், சத்தமாக கோஷமிடுகின்றன, "சதி மாதா க்கீ ஜே.. சதி மாதா க்கீ ஜே.. " விண்ணை பிளக்கும் சத்தத்தில், அவள் கதறல் காணாமல்போகிறது.
சிதையருகே அவள் கொண்டுசெல்லப்பட்டதும், நால்வர் அவள் திமிராதவண்ணம் பிடித்துக்கொள்ள, ஒரு மருத்துவர் அவளுக்கு மயக்க ஊசியை போடுகிறான். அவனுக்கு மூட்டிய அதே தீயில், மயக்க நிலையிலிருந்த அவளை தூக்கிபோட்டனர். மயக்க நிலையில் இருந்த அவள் துடிக்கவில்லை. ஆனால், அவளை அழைத்துவரும்போதே அவள் லட்சம் மடங்கு துடித்துவிட்டாள். வழக்கு தொடரப்பட்டு சாட்சியில்லை என்று வழக்கம்போலவே அநீதிமன்றம் குற்றவாளிகளை விடுவிக்கிறது. அவள் இறந்த இடத்தில் சதி மாதா ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. "சதி மாதா க்கீ ஜே" என்ற முழக்கங்களுடன் ஆட்டுமந்தை கூட்டங்கள் இன்றும் அங்கே ஆராதனை செய்கின்றன.
Bloody Indian என்ற வெள்ளையனின் வார்த்தை நம்மை கோபமூட்டுகிறதே தவிர, நாம் Bloodys (கொடூரமானவர்கள்) என்பது உண்மையா, இல்லையா என்ற கேள்வியை ஒருமுறையேனும் நம்மை கேட்டுப்பார்க்கவில்லை.. சாதியின் பெயரால், மத நம்பிக்கைகளின் பெயரால் எத்தனை மிருகத்தனங்கள்.??

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home