5 September 2013

கருணாநிதியை தாக்கும் காமெடி கமெண்ட்டுகள்......!!



(இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கோ அல்லது யாரையும் இழிவுப்படுத்துவதற்கோ அல்ல...)

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை, கலியுக மணிமேகலை என திமுக தலைவர் கருணாநிதி சொன்னாலும் சொன்னார், ஃபேஸ்புக், டுவிட்டரில் கமெண்ட் போட்டு தாக்குகின்றனர்.

சிலப்பதிகார காப்பியத்தில் கோவலன்- மாதவிக்கு பிறந்தவர் மணி மேகலை. துறவரம் பூண்டு மக்களின் பசியை போக்க ஆண்டனை வேண்டிய காரணத்தால் மக்களின் பசியை போக்கும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் அமுதசுரபி மணிமேகலைக்கு கிடைத்தது. அதன் மூலம் அனைவருக்கும் உணவு அளித்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோடிட்டு காட்டியுள்ளார்.

இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியை மணிமேகலையோடு ஒப்பிட்டு பாராட்டுவதா என்று கொதித்த இணைய போராளிகள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் தோராணங்களால் கட்டி தொங்க விடுகின்றனர்

சாம்பிளுக்கு இதோ நீங்களும் படித்து ரசியுங்கள்...

1)
மணிமணி….

காசு... பணம்... துட்டு... மணி... மணி... பாடலை உல்டாவாக்கி... கட்சி... பதவி... சீட்டு... மணி... மணி... என்று பதிவிட்டுள்ளனர்.

2)
கூட்டணிக்காகவா ?

கூட்டணியில வேணும்னா சேர்ந்து தொலைங்க அதுக்காக சோனியாவைப் போயி மணிமேகலைன்னு சொல்லாதீங்க!

3)
மணி, மேக், லை

Money make lie
என்று நச் கமெண்ட் போட்டுள்ளார் ஒரு பதிவாளர்

4)
வளையும் பதி

வெங்கடேஷ் என்பவர் தனது பதிவில் மணிமேகலை என்று சொன்னவர் வளையும் பதி என்று குறிப்பிட்டுள்ளார்.

5)
இதிகாச உதாரணம்

நாத்திக நாக்கு சொல்லும் உதாரணமெல்லாம் இதிகாசம்தான்

6)
ஸ்டாலின் விரும்பி கேட்ட பாடல் :

மணிமேகலையே... மணி ஆகலையே... நம்ம கூட்டணி இப்ப வேணும்!... என்ற பாடலை விரும்பி கேட்டவர் மு..

7)
சோத்துக்கு வந்திருக்காங்க!

வாம்மா மின்னல் காமெடியை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பதிவிட்டுள்ளார் ஒரு பதிவாளர் மேகல... அம்மா மணி மேகலை... புள்ளைங்கலெல்லாம் சோத்துக்கு வந்திருக்காங்க... வாம்மா!

08)
எனக்கும் அப்படித்தான் :

உங்களுக்கு எல்லாம்ஜிங் ஜாங்... ஜிங் ஜாங்... என்றா கேட்கிறது? எனக்கும் அப்படித்தான் கேட்கிறது!

9)
ஒயிட் ரைஸ் வெள்ளைச்சாமி :

அம்மா... தாயே...ஒயிட் ரைஸ் வெள்ளைச்சாமி வந்திருக்கேன் என ஒருவர் போட்ட கமெண்டுக்கு 850 பேர் லைக் போட, 55 பேர் அதை ஷேர் செய்துள்ளனர்.

10)
அறிக்கைக்கு ஆப்பு :

இது மட்டுமல்லாது இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து கருணாநிதி சமீபத்தில், இந்திய பொருளாதார சோதனையில் வெற்றி பெரும் என்று அறிக்கை வெளியிட்டார். உடனே அதற்கு ஸ்டேட்டஸ் போட்ட வலைப்பதிவாளர்கள், இது மணிமேகலை அனுப்பிய நோட்ஸா என்று கேட்டுள்ளனர்.

ஆன்லைனில் ஆப்பு வைப்பதில் இணைய போராளிகள் கெட்டிக்காரர்கள் தான் போங்கள்!


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home