2 September 2013

உலகெங்கும் இஸ்லாம் வேகமாக பரவியது முதல் இன்று வரை... ஒரு சுவாரஸ்ய கட்டுரை.



இஸ்லாமிய சாம்ராஜிய வரலாறு வெறுமனே ஒரு வார்த்தையால் சுருங்கக் கூறி முடிக்க முடியாத,அது பல தியாகம், இழப்பு, போராட்டம், சகிப்பு போன்ற முழு அகிம்சையுடனான வரலாற்றுடன் ஒலித்தோங்கிய ஒரு சாம்ராஜியம்.

உலகெங்கும் இஸ்லாம் வேகமாக பரவிய காலம் குறிப்பாக அப்பாசிய கலிபாக்கள் ஆட்சிகாலம் ''இஸ்லாமிய பொற்காலம்' என அழைக்கப்படுகின்ற,இந்த காலத்தில் இஸ்லாம் கலை ,மற்றும் அறிவியல் ஆகிய துறைகளிலும் செழித்து வளர்ந்தது. துருக்கியின் ஒட்டாமன் பேரரசின் எழுச்சிக்குப்பிறகு, கலிபாக்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

"
உமையா" என்ற பெயர் முதலாம் உமையா கலீபாவின் முப்பாட்டனாரான உமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ் என்பவரது பெயரிலிருந்து தோன்றியது. உமையாப் பரம்பரையின் தொடக்கம்மக்காவாக இருந்தபோதிலும் திமிஷ்கு (சிரியா ) உமையா கிலாபத்தின் தலைநகராக விளங்கியது. முஆவிய டமஸ்கஸை அழகானதொரு நகரமாக மாற்றினார். மேலும் இஸ்லாமிய பேரரசின் எல்லைகளை ஒரு கட்டத்தில் கொன்ஸ்தாந்திநோபிள் வரைக்கும் விரிவுபடுத்தினார்.

மாத்திரமல்லாமல் எகிப்து மூஸா (அலை) , யூஸஃப் (அலை) இப்ராஹிம் (அலை) அவர்களின் மனைவி ஹாஜரா (அலை) போன்றவர்களை ஈன்றதும் இப்புனித பூமியே..!

அல் குர்ஆனில் எகிப்து பற்றி இவ்வாறு சான்று பகிர்கிறது (யூஸுஃபை) எகிப்து நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்என்று கூறினார்.
இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள் (12:21)

அன்றியும் ஏறத்தாழ கிமு 6000 ஆண்டளவில் நைல் ஆற்றங்கரையில் புதிய கற்காலப் பண்பாடு உருவானது. புதியகற்காலத்தில் மேல் எகிப்திலும் கீழ் எகிப்திலும் பல வம்சங்களுக்கு முற்பட்ட பண்பாடுகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்தன. பாடேரியப் பண்பாடும் தொடராக உருவான நக்காடாப் பண்பாடுகளும் வம்ச ஆட்சி எகிப்துக்கு முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றன. ஒரே காலக் கீழ் எகிப்தியப் பண்பாடுகளைச் சேர்ந்தோர் தமது தெற்கு எகிப்திய அயலவர்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.

பின்னர் இரண்டாம் வலீத் எகிப்து மற்றும் பைசாந்தியப் பேரரசுகளின் பகுதிகளை மீளவும் கைப்பற்றியதோடு வட ஆபிரிக்காவின் மேற்குப்பகுதி மற்றும் கார்தேஜ் ஆகிய நிலப்பரப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவ்வாறு இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பல வரலாற்றுக் கதைகளும்,சிறப்பும் இப் புனித பூமிக்கும் இல்லாமலில்லை.

இவ்வாறு புனித வரலாறுகளும்,சிறப்புகளும் கொண்ட எம் புனிதர்களின் கால்தடங்கள் பதிந்த புனித மண்ணில் ஜனநாயகமற்ற,வீண் படு கொலைகளைப் பார்க்கும் போது நெஞ்சம் ஒரு போதும் சகிக்க முடியவில்லையே…! காலமது வெகு தொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ்.

அவர்கள் அரேபியர்கள்தானே என்று நாம் செவ்வனே செவி மடுக்காமல் இருக்கவும் முடியாது ஏனெனில் இலங்கை முஸ்லிம்களுக்கும் அரேபியர்களுக்குமிடையிலான பந்தம்,உறவு இன்று நேற்று உண்டாணதல்ல.அது பல நூற்றாண்டுகள் கொண்டது.அன்றைய அரேபிய வார்த்தகர்களான அரபி பாஷா (எகிப்து-கண்டியில் இன்னும் அவரது வீடு பாதுகாப்பாக இருக்கிறது ) நபி (ஸல்) அவர்களுக்கு முன்பதாகவே பாவா ஆதம் மழைக்கு யாத்திரிககர்கள் வந்து சென்றமை பல வரலாற்று ஆசிரியர்கள் பதிந்துள்ளார்கள் அதன் பின்பு இப்னு பதுதா போன்றவர்களின் இலங்கை வருகை மேலும் எமக்கு வரலாற்று சான்று.
இவ்வருகை மூலம் கூட நமது வழித் தோன்றாலாக இருக்கலாம்.

மாத்திரமன்றி சிறியாவின்அளப்போஎன்ற பகுதியில்இருந்து வந்த வார்த்தகர்களின் வம்ச வழியாக கூட நாம் இருக்கலாம்,இன்னும் பல மறைக்கப்பட்ட வரலாறுகள் இருப்பினும், மனிதப் படுகுலியாகும் புனித பூமிக்காக வேண்டி (எகிப்து,சிரியா) நாம் ஆகக் குறைந்த பட்சம் ஒரு வேலை பிரார்த்தனையாவது செய்யலாமே, இப்படியான எம் சங்கிலித் தொடர் உறவுக்காக ஒரு நிமிடமேனும் மனம் வருந்திவதில் தவறில்லயே. வாருங்கள் ஒருமித்த குரலில் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க ஓசை கொடுப்போம்.

இஸ்லாம் இன்று உலகம் முழுவதும் வெகுவாகவும்,வேகமாகவும் பறந்து பரவி வருகின்றமையும் இஸ்லாமிய கிலாஃபத் மீண்டும் உயிர்பிக்குமோ என்ற பீதியாகக் கூட இருக்கலாம் இந்த மனிதப் படுகொலையின் பின்னணியும் சூட்சியும். அரேபியர்களும் விழித்த்திருந்தும் தூங்குகின்றார்களோ..! கேட்பார்,பார்ப்பார் இல்லா இந்த பூமி இன்னும் பல வரலாறு படைக்கட்டும் என்று கைகட்டி நிட்கிறார்களோ ..!

(
பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும்அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்என்றும் கூறினார்
(12:99)

அல்லாஹ் நாடினால் எகிப்தினுள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்என்ற குரான் வசனம் சாந்தியையும்,ஓற்றுமயையும், அமைதியையும் எடுத்துச் சொல்கிறதது ஆனாலும் அதற்கு மாறாக இன்று பீதியாகவும்,கொடூரமகவும் இருப்பதை பார்க்கும்போது சொல்லில்லடங்கா..

இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் நபிமார்களின் கால் சுவடுகள் பட்ட புனித மண்ணில் இரத்த சுவடுகளை காணும் போது கண்கள் கலங்குகின்றன இப்புனிதங்கள் பூத்த புனித பூமியினிலே பூப்பரிக்க ஆயுதம் தேவைதானா..?

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்என்று வெறுதே இருக்காமல் உலக முஸ்லிம் தலைவர்களே தேடுங்கள் ஒரு பொறி முறையை அல்லது வழி முறையை ,வேண்டாமே இனியும் மனிதப் படு கொலை இந்த புனிதம் பூத்த பூமியினிலே…!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஒரு ஒற்றுமைப்பாட்டுடனான இராஜதந்திர தீர்க்கமான முடிவை எதுக்கும் என்ற அவாவுடனும்,துவாவுடனும் இம்மனிதம் பரஸ்பர,சுதந்திர சொற்ப வாழ்க்கையேனும் வாழ வழி வகுத்ததுக் கொடுக்கட்டும் , யா அல்லாஹ் ஆனாலும் முடியவில்லை எழுதி முற்றுப்புள்ளி வைக்க....



- See more at: http://madawalanews.com/news/miscnews/7819#sthash.mMAX3Fmb.dpuf

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home