3 September 2013

குட்டிக்கதை:





ஒரு அரசவையில் பரிசளிப்பு விழா நெரிசலைக் கண்டு அரசன் ஏற்கெனவே எரிச்சலில் இருந்தான். வந்து விழுந்தவர் புலவர் என்பது அவனுக்குத் தெரியாது. யாரோ இரவலர் என்று எண்ணியவன், விழுந்து கிடந்த புலவரைப் பார்த்துஅடேய்! பறக்காதே!” என்றார்.

விழுந்த புலவர் எழுந்தார். எழும்போதே பாடல்கணீர்என்று புறப்பட்டது.

கொக்கு பறக்கும்! புறா பறக்கும்!
குருவி பறக்கும்! குயில் பறக்கும்!
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்
நான் ஏன் பறப்பேன் நராதிபனே!”

இந்த வரிகளே, வந்திருப்பவர் புலவர் என்பதை அரசனுக்கு உணர்த்தியது.

மனம் வருந்தினான். உரிய மரியாதைகள் செய்தான்.
தன் மீதும் தன் புலமை மீதும் புலவருக்கிருந்த மரியாதை, அரசனையும் பணிய வைத்தது.

உங்களை நீங்கள் மதியுங்கள். உலகம் நிச்சயம் மதிக்கும்.

via Shahulhamid.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home