19 September 2013

இரண்டு நாட்களுக்கு முன்பு நெருங்கிய நண்பர் ஒருவர் யூடுப் -ல் ஒரு காணொளியை காட்டினார். ''Lena Fokina '' என்கிற இரஷிய நாடு பெண்மணி ஒரு குழந்தையை தலை கீழாக ஒரு கையில் பிடித்துக் கொண்டு மேலும் கீழும் என்று எளிதாக சுழட்டிக் கொண்டிருந்தார்.



இரண்டு நாட்களுக்கு முன்பு நெருங்கிய நண்பர் ஒருவர் யூடுப் -ல் ஒரு காணொளியை காட்டினார். ''Lena Fokina '' என்கிற இரஷிய நாடு பெண்மணி ஒரு குழந்தையை தலை கீழாக ஒரு கையில் பிடித்துக் கொண்டு மேலும் கீழும் என்று எளிதாக சுழட்டிக் கொண்டிருந்தார்.

இதற்கு பெயர் ''baby yoga'' . குழந்தைகளுக்கென்று பிரத்தேகமாக ''Lena Fokina '' என்கிற இரஷிய பெண்மணியால் கண்டுப்பிடிக்கப்பட்டது என்று நண்பர் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தார். அதைக் கேட்டது எனக்கு பயங்கர கோபம். ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் வெள்ளைக்காரன் இதையும் நம்மிடமிருந்து திருடி விட்டார்களே.

நான் சிறியவனாக இருக்கும் பொழுது வீட்டிலிருக்கும் கைக்குழந்தைகள் ஏதாவது காரணமே இல்லாமல் அழுத்துக் கொண்டிருந்தால் உடனே என் பாட்டி என்னை அழைத்து ''டேய் பையா, போய் விளக்கெண்ணையை எடுத்துட்டு வா'' என்று சொல்லுவார்.எடுத்து வந்துக் கொடுத்தால் அந்த எண்ணையை குழந்தையின் வயிறு மற்றும் தொப்புள் பகுதியிகளில் தடவி, நீவி விடுவார். பிறகு அக்குழந்தையின் இரண்டு கால்களையும் ஒரே கையில் சேர்த்துப் பிடித்து சற்றென்று அப்படியே உயரே தூக்கி ஒரு குலுக்கு குலுக்குவார். நெட்டி விழுவதுப் போல் ஒரு சத்தம் கேட்கும்.

அவ்வளவுதான் அதுவரை அழுத்துக் கொண்டிருக்கும் குழந்தை சிரிக்க ஆரம்பித்துவிடும். உடனே நான் ''ஏன் பாட்டி இப்படி செஞ்சிங்க'' ? னு கேட்டால் ''அது ஒன்னுமில்லடா தம்பி, தொட்டியிலே படுக்குற குழந்தைகளுக்கு சில சமயங்களில் ''ஒரம்'' (குடரத்தம்) விழுந்துடும்.இப்படி செஞ்சா தான் ஒரம் எடுக்க முடியும்'' என்று விளக்கம் கொடுப்பார்.சில நேரங்களில் குழந்தைகளை குளிப்பாடும் பொழுதுக் கூட இப்படி ''ஒரம்'' எடுப்பார் .''இப்ப ஏன் எடுக்கிருங்க''-னு என்று கேட்டால் ''இப்படி செய்தால் குழந்தையின் இரத்தம் சீராக ஓடும்'' என்று விளக்கம் கொடுப்பார். என்னைப் போன்று உங்களில் சிலரும் உங்கள் அம்மாவோ பாட்டியோ குழுந்தைகளை குளிப்பாடும் பொழுது இந்த உத்தியை கையாள்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதனை பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம் இப்பொழுது இருக்கின்ற பெண்களுக்கு குழந்தைகளை குளிப்பாட்டுவது எப்படி என்பது கூட தெரிவத்தில்லை.

மேலும் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதுப் போன்ற பாட்டி தாத்தா என்கின்ற குடும்ப உறவுகளுக்கு அழிந்து வருவதால் நம்முடைய முந்தைய தலைமுறையிடமிருந்து இந்த இளையதலைமுறை கலை, இலக்கியம்,பண்பாடு,மருத்துவம்,வாழ்வியம் முறை என எதையும் கற்றுக் கொள்ள முடியவில்லை. விளைவு நம்முடைய ''ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பேபி யோகா'' என்று பெயரை மாற்றி யாரோ ஒரு இரஷிய காரி 'இதை நான்தான் கண்டுப்பிடித்தேன்'' என்று பெயரை வாங்கிவிட்டாள். நாமும் வெட்கமே இல்லாமல் ''wow ... wonderful '' என்று கைதட்டிக் கொண்டிருக்கின்றோம். (பின்குறிப்பு :- இணையத்தில் தமிழர்கள் குழந்தைகளை ஒரம் எடுத்துக் குளிப்பாட்டுவதைப் போல் ஏதாவது படம் இருக்கின்றதா என்று தேடிப்பார்த்தேன். ஒரு படம் கூட இல்லை.

நண்பர்கள் யாராது தங்கள் வீட்டில் இந்த முறை தெரிந்தவர்கள் யாரவது இருந்தால் அவர்கள் இக்கலையைப் பற்றி செய்முறை விளக்க காட்டுவதைப் போல் படம் பிடித்து இணையத்தில் போடவும். நம்முடையை கலைகளை நாம்தாம் ஆவணப்படுத்த வேண்டும்.)

via பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்

ஒரம் எடுப்பது தொக்கம் எடுப்பது என்று குழந்தைகளுக்கு ஏகப்பட்ட வெற்றிகரமான கை வைத்தியங்கள் நம்மிடையே இருந்தாலும் வெளிச்சத்திற்கு வருவதென்னவோ அயலான் அதை அம்பலப்படுத்தும் போது தான்! அதுவும் தான் கண்டுபிடித்தது என்று copy rights, patent rights வேறு வாங்கிவிடுவார்கள்!

சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதுப் போன்ற பாட்டி தாத்தா என்கின்ற குடும்ப உறவுகளுக்கு அழிந்து வருவதால் நம்முடைய முந்தைய தலைமுறையிடமிருந்து இந்த இளையதலைமுறை கலை, இலக்கியம்,பண்பாடு,மருத்துவம்,வாழ்வியம் முறை என எதையும் கற்றுக் கொள்ள முடியவில்லை


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home