சிவாஜி: வீரசிவாஜியா? பார்ப்பன அடிமையா?
சிவாஜியை வீரசிவாஜி என
பாடப்புத்தகத்திலும், இந்துத்துவவாதிகளும் ஒரு நூற்றாண்டுக்காலமாக
நம்மீது போலியான கட்டமைப்பை திணித்து நம்ப
வைத்திருக்கிறார்கள். ஆனால் வரலாற்று
உண்மை என்ன? சிவாஜி பிராமண
இருண்டகால,வேதகால ஆட்சியை நிறுவ
முயன்று தோற்றுப் போன ஒரு பிராமண அடிமை
சிவாஜி.ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க
அணியினர் சிவாஜியின் ‘இந்து ஸ்வாரஜ்’
மராட்டிய மாதிரி ஆட்சியை தங்கள் கனவாக
கொண்டிருக்கும் அதே பாணியில் ஆட்சி
அமைக்க துடிக்கும் அந்த முன்மாதிரி
ஆட்சியின் அவலங்களையும் சிவாஜியின்
உண்மை தோற்றத்தையும் விரிவாக பார்ப்போம்
இந்த பதிவின் ஊடாக.
சாதி என்பது தொட்டுத் தொட்டு பற்றித் படரும் ஆற்றல் மிக்கது. அது தேச ஒற்றுமைக்கு பரம விரோதமானதாகும். சிவாஜியின் ‘இந்து ஸ்வாரஜ்’ வைதீகப் பழமையில் கட்டியெழுப்பப்பட்டதால் அதனினுடைய மரண அணுக்களும் அதற்குள்ளயே இருந்திருக்கிறது. சாதி வேற்றுமைகளையும் விரோதங்களையும் உயிரெனப் பாதுகாத்த இந்து கலகம் தோய்ந்த சமுதாயத்தின் ஆதிக்கத்தை இந்தியா முழுக்க நிலைநாட்டத்தான் சிவாஜி விரும்பினார். அது மணலைக் கயிறாகத் திரிப்பதற்கொப்பான நடைபெறாத விஷயமாகும். இந்தியாவை போன்ற ஒரு பெரும் கண்டத்தை முழுக்க சாதி வேற்றுமைகளாலும் மனிதநேய உணர்வின்மையும் சீரழிந்த ஒரு சமுதாயத்தின் கீழ்கொண்டுவர எத்தகைய மனித சக்தியாலும் முடியாது. இவ்வாறு சீரழிந்து செல்லரித்துப்போன ஒரு சமுதாய அமைப்பை உள்ளடக்கிய பிராமணக் கொடுங்கோன்மைக்கு இந்தியாவை அடிமை கொள்ளத் தான் பதினெட்டாவது நூற்றாண்டில் சிவாஜி என்கிற பிராமண அடிமையைக் கொண்டு முயற்சித்தனர்.
புரோகிதக் கொடுங்கோன்மையின் அநியாயங்களைச் சகிக்க முடியாமல் மக்கள் மூச்சுத்திணறித் துடித்து கொண்டிருந்தனர். அவர்களுடைய தேசிய அபிலாஷைகளும் கோட்பாடுகளும் மிதித்து நசுக்கப்பட்டன. சாதியின் அடிமைத்தனமும் அவமானமும் அவர்கள் மீது திணிக்கப்பட்டன. பேஷ்வாக்களும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் செல்வம் குவிக்க மக்களுடைய சொத்துக்களைப் பிழிந்தெடுத்தனர். சுதந்திர மனிதனின் அவனுடைய பாதுகாப்பின் கடைசி தொங்கு நூலும் அறுக்கப்பட்டது. உண்மையில் பிரிட்டீஷ்காரர்கள் பிராமண அடிமை சிவாஜியின் மராட்டிய தேசத்தை கைப்பற்றியது அவர்களுக்கு வரவேற்கத்தக்கதாக இருந்தது. “மராட்டிய மக்கள் எத்தகைய எதிர்ப்பையும் தெரிவிக்காமல் சோம்பலாக இருந்துவிட்டதால் மராட்டியத்தை கைப்பற்றுவது ஆங்கிலேயர்களுக்கு எளிதாக இருந்தது.
சிவாஜி சிறு வயதிலிருந்தே பிராமணர்களிடம்தான் வளர்ந்தார். தந்தை தன்னுடைய மேலாளரான பிராமணனிடம் சிவாஜியை ஒப்படைத்து எங்கோ போய்விட்டார். வைதிக மதத்திலும் விக்கிரக பூஜையிலும் ஆழந்த பக்தி நம்பிக்கைகொண்ட ஒரு சிறுவனாக சிவாஜி வளர்ந்தார். சிவாஜியிடம் அடிக்கடி பாவனிதேவியின் அருள் வெளிப்பட்டதாகவும் , சிவாஜிக்கு இடுக்கண்நேரும் போதெல்லாம் தேவியின் அறிவுரை கிடைத்துக் கொண்டிருந்ததாகவும் பல பேர் நம்பினர். இது சிவாஜியின் தலைமையைப் பலப்படுத்த புரோகிதர்கள் பரப்பிய கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.
ஒரு நாட்டின் நிறுவனர் என்ற அருகதை பெற்ற சிவாஜி தன்னுடைய இளம்பருவத்துப் பிராமணத்தைக் கைவிட முடியாதவராக இருந்தார். எனவே தன்னையும் தன்னுடைய நாட்டையும் புரோகிதக் கொடுங்கோன்மையிடம் ஒப்படைத்துவிட்டார். நாட்டை பிராமணர்களுக்கோ கோவில்களுக்கோ காணிக்கையாக்குவது, அல்லது தானமாகக் கொடுப்பது, சாதி வேற்றுமையை ஒப்புக்கொண்டு சத்திரிய பதிவியை ஏற்பது, திவான்களும் ஆலோசகர்களுமாக இருப்பதற்கு பிராமணர்களுக்கு உரிமையிருக்கிறதென்று அங்கீகரிப்பது போன்றவை வாலி, வாமனன் காலத்திலிருந்து நவீன திருவிதாங்கூர் வரலாறுவரை பிராமண நுகத்தடியை சுமக்கும் சடங்குகளாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
சிவாஜியின் குரு ராமதாசர் என்றழைக்கப்படும் பிராமணராவர். சிவாஜி தன்னுடைய நாட்டை குருவுக்குக் காணிக்கையாக்கிவிட்டு சனாதன தர்மத்தைப் பரிபாலிப்பதற்காகக் குருவிடமிருந்து அதை திரும்பப் பெற்றுக் கொண்டார். திருவிதாங்கூர் மன்னர் நாட்டைக் கோவிலில் இருக்கும் கடவுளுக்குச் சமர்ப்பித்து விட்டு, கடவுளின் தாசராக இருந்து ஆள்வதற்காக அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு நாட்டை ஒரு ‘ பிரம்மஸ்வம்’ அதாவது பிராமண ராஜ்யமாக நினைத்துக் கொண்டு ஆட்சி புரியும் பொறுப்பு தனக்கிருப்பதாக சிவாஜி ஒப்புதல் அளித்தார்.
சிவில்-மிலிடெரி ஆட்சியின் மிகமுக்கியப் பதவிகள் அனைத்திலும் பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர். மன்னரின் கீழ் எட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு அமைச்சரவையும் இருந்தது. சிவில் - மிலிடெரி ஆட்சியின் ஆகப்பெரிய உச்ச அதிகாரியும் பிரதம மந்திரியுமாய் (பேஷ்வா) பிராமணர்தான் இருந்தார். இந்தப் பதவி ஒரு குடும்பப் பரம்பரியுமை படைத்ததாக மாறி, சிவாஜியின் காலத்திற்குப் பிறகு பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சியாளர்காளயினர். சிவாஜியின் முடிசூட்டு விழா காலத்தில் இராணுவத் தலைமைத் தளபதியாத் தவிர மற்ற எல்லா அமைச்சர்களும் பிராமணர்களாக இருந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி சிவாஜிக்கு இருநூறு கோட்டைகளும் ஒவ்வொரு கோட்டையைச் சுற்றிகிராமங்களும் இருந்தன. இவை ஒவ்வொன்றின் சிவில் ஆட்சிக்கும் ஒரு பிராமண சுபேதாரும் ராணுவத் தளபதியாக ஒரு மராட்டிய ஹவில்தாரும் அமர்த்தப்பட்டிருந்தனர். மராமத்துப் பணிகள், கிடங்குகளின் மேற்பார்வைக்கு ஒரு பிரபுவும் இருந்தார். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏறத்தாழ இதைப் போலத்தான் ஆட்சி அமைப்பு இருந்தது. ஒவ்வொரு ராணுவக் குழுவின் தளபதியின் கீழும் பிராமணர்களும் பிரபுக்களும் அதைகாரிகளும் இருந்தனர். பெரிய ராணுவப் படைக்குழுக்களின் தலைவர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர்.
அமைச்சரவையில் மதவிஷயங்களுக்கான அமைச்சராக பண்டிட்ராவ் என்ற ஒரு பிராமணர் இருந்தார். சாதிச் சட்டங்களையும் ஆச்சாரங்களையும் நடைமுறைப்படுத்துவது, சிவில் - கிரிமினல் சட்டங்களை அமுலாக்குவது, அரண்மனையைச் சார்ந்த தர்மஸ்தாபனங்களை நிர்வகிப்பது போன்றவை பண்டிட் ராவின் பொறுப்பிலிருந்தன.
பிராமணர்கள் அனைவருக்கும் அவரவர்களின் புலமைக்கேற்ப ஆண்டுதோறும் காணிக்கையும் நன் கொடைகளும் அளிக்கப்பட்டன. வாழக்கைப்பாட்டிற்காக எந்தப் பிராமணனும் நாட்டைவிட்டு வெளியே செல்ல நேரவில்லை. இந்தத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலையான நிதிவைப்பிலிருந்து கிடைக்கும் ஆண்டுவருவாய் மட்டும், ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றியபோது ஐந்து லட்சம் ரூபாய் இருந்ததாம்.
தன்னுடைய அரசாட்சியை நிறுவ முப்பதாண்டுக்காலம் சிவாஜி இடைவிடாது போராடினார். ராஜபதவியையும் ஆட்சியையும் சட்டபூர்வமாக்க்கத் தன்னுடைய ‘பட்டாபிஷேகத்தை’ (முடிசூட்டுவிழா) இந்து சாத்திர முறைப்படி கெளரவமாக மேற்கொள்ள சிவாஜி விரும்பினார். சிவாஜியைப் பிராமண ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் ஒரு சத்திரியனாக மாற்ற பிராமணர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துவிட்டது. நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பதினோராயிரம் பிராமணப் பண்டிதர்களை அவர்களுடைய மனைவி மக்கள் உட்பட ஐம்பதாயிரம் பேரை தலைநகருக்கு வரவழைத்து, நான்கு மாதகாலம் அவர்களுக்கெல்லாம் அறுசுவை உணவளித்து உபசரித்ததோடு தங்கமும் பணமும் தானமாக அளித்தார் சிவாஜி. முக்கியப் புரோகிதரான கங்கபட்டனுக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கிடைத்ததாம். இந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்திற்கு ஏழுகோடி அக்காலத்திலேயே செலவழிக்கப்பட்டதாக கூறுகின்றனர் வரலாற்றுசிரியர்கள்.
சாத்திர முறைப்படியான பட்டாபிஷேகத்திற்கு ஒரு சத்திரியனுக்கு மட்டுமே உரிமையிருப்பதாக பிராமணர்கள் வாதாடினர். எனவே சிவாஜி உதயப்பூர் நாட்டின் ரஜபுத்திரப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சாதிப்பதற்காக ஒரு வம்சபரம்பரைப் பட்டியலே தயாரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு புரோகிதர்களுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்து அவர்களிடமிருந்து உபநயன கர்மத் (பூணூல் அணிதல்) தையும் சிவாஜி ஏற்றுக் கொண்டார் இதைத் தவிர சிவாஜியின் போர்களில் பிராமணர்கள் கொல்லப்பட்டதற்குப் பாவ பரிகாரமாக பிராமணர்கள் எட்டாயிரம் ரூபாய் கோரிப் பெற்றனர். இந்த அளவுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த பிறகும் தேவமந்திரம் செவிமடுக்க சிவாஜியைப் புரோகிதர்கள் அனுமதிக்கவில்லையென்பது மட்டுமின்றி, சிவாஜியை ஒரு சூத்திரன் என்று கூறிப் புறக்கணித்தனர்.
சிவாஜியின் அனைத்துப் போர்களிலும் பிரபுக்கள் மகத்தான சேவையாற்றினர். பிரபுக்களுக்குப் பாரம்பரியத்திற்கேற்ப இருந்த சாதிப் பதவியில் எத்தகைய இறக்கங்களையும் செய்யக் கூடாது என்று மன்னரின் கட்டளை இருந்தபோதிலும் பிராமணர்கள் பிரபுக்களை சாதியில் தரம் குறைப்பதற்காக புராணங்களில் இடைச் செருகலாக புதிய வாக்கியங்களை எழுதிச் சேர்த்தனர். பேஷ்வாக்களின் ஆட்சி துவங்கிய பிறகு பிரபுக்களுக்கு புதிய உத்தியோகங்கள் எதுவும் அளிக்கப்படாமல் அவர்களுடைய உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன. மன்னர்களும் பேஷ்வாக்களும் சாஸ்திரங்களின் அனைத்து அநீதிகளையும் அதர்மங்களையும் ஈவிரக்கமின்றி அமுலாக்கினர். பேஷ்வா பூனாவில் ஒரு மதநீதிமன்றத்தை நிறுவி பிராமணர்களை நீதிபதிகளாக்கினார்.
“ இந்துச் சட்ட நியுணரான ஒரு சாஸ்திரி அதன் தலைமை நீதிபதியாக இருந்தார் மத அடிப்படையிலான,சாதி அடிப்படையிலான, எல்லா வழக்குகளையும் அந்த நீதிமன்றம் விசாரனை செய்து தீர்ப்பளித்தது. உடன்கட்டை ஏறுதலும் (சதி) பால்ய விவாகங்களும் முன்னை விட கூடுதலாக ஊக்குவிக்கப்பட்டன. இறந்துபோனவர்களின் மனைவி மட்டுமின்றி அவருடைய வைப்பாட்டிகளும் உடன்கட்டை ஏற வற்புறுத்தப்பட்டனர்.
சிவாஜி காலமான பிறகு பேஷ்வாவும் பிராமண நண்பர்களும் சேர்ந்து மூத்த புதல்வரைப் புறக்கணித்துவிட்டு இரண்டாவது புதல்வருக்கு மகுடம் சூட்டினர். மன்னர் பேஷ்வாவின் கட்டுப்பாட்டில் சொந்த அரண்மனையிலேயே ஒரு கைதியைப் போல் ஆகிவிட்டார். பேஷ்வாக்கள் ஆட்சி அதிகாரத்தைக் குடும்பச் சொத்தாக்கி கையப்படுத்தினர். இத்தகைய வஞ்சகச் செயல்கள் காரணமாக மக்களுக்குள் உறங்கிக் கிடந்த கோபமும் கலகமும் வெடித்துக் கிளம்பின. ரஜபுத்திரத் தலைவர்கள் அவரவர்களின் மாவட்டங்களில் சுதந்திரப் பிரகடனம் செய்தனர். அமைச்சரவை ஒழிந்துவிட்டது. சிவாஜி இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குள் அவருடைய பேரரசும் நொறுங்கிச் சிதைந்துவிட்டது.
சிவாஜியின் காலத்திலும் பேஷ்வாக்களின் காலத்திலும் மக்களை ஒரு நாட்டின் கீழ் ஒருங்கினைக்கவும் கல்வியில் முன்னேற்றவும் புத்திசாலித்தனமான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பிராமண அதிகாரிகளின் பணப் பேராசையில் இருந்து யாரும் தப்ப முடியவில்லை. அவர்கள் செல்வந்தர்களிடமிருந்து முடிந்த அளவுக்குப் பணத்தை ஈவிரக்கமின்றிப் பிழிந்தெடுத்தனர். கடைசி பேஷ்வா பிராமணரின் வீழ்ச்சியின் போது அவர் ஐந்து கோடிரூபாய் சம்பாதித்திருந்தார்.
(ஆக்கம் http://sambuganin.blogspot.com/2013/09/blog-post.html)
தோழர் சம்பூகன் நான் பிளாக்கில் போட அனுமதி கொடுத்து அவர் வெளியீட்டு இருக்கிறார்.
References
Chapter XIII
Ranade's Rise of Maratha Power - 36,10,50,51
J.Sarkar's Sivaji and his times page : 431,430,435, 432,17,8,429,430, 431
C.A.kincaid and parasnis History of Maratha people Vol. 3 page 243,175,233.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home