2 September 2013

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையால் மணிக்கொரு மரணம்! - புள்ளிவிவரங்கள்!




இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்தியா முழுவதும் 2012 ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக நேசனல் க்ரைம் ரிக்கார்ட் பீரோ வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

2007
ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்துக்கும் கூடுதலாகவே இருந்து வந்துள்ளது என்றும் தெரியவருகிறது. தவிர 2007 க்கும் 2011 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வந்துள்ளது.

வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் இறந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவங்களில் சராசரியாக 35 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் வரதட்சணை ஒழிப்பு சட்டம் 1961 ஆம் ஆண்டே அமலுக்கு வந்துவிட்டாலும் இன்றளவும் சாவு எண்ணிக்கை அதிகமாக இருப்பது, சட்டம் இருந்தும் இல்லாத ஒரு நிலையையே காட்டுவதாகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகிறார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home