2 September 2013

சுல்தான் சலாஹுதீன் அய்யூபி



சரித்திரத்தில் சிறிய படை மூலம் மிகப்பெரிய படையை வெற்றி கொண்ட மாவீரரின் சிறப்பு பண்பு...



மூன்றாவது சிலுவைப்போரில் வெற்றி பெற்றபிறகு சுல்தான் சலாவுதீன் நெடுநாள் உயிர்வாழவில்லை. யுத்தத்தின்போது ஏற்கெனவே அவருக்கு விஷக்காய்ச்சல் கண்டிருந்தது. ஒருமாதிரி மனோபலத்தில் தாக்குப்பிடித்து யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் பெற்றிருந்தார். தாம் அதிகநாள் உயிர்வாழ மாட்டோம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது போலிருக்கிறது. ஜெருசலேம் சிம்மாசனத்தில் அந்த முறை அமர்ந்த நாளாக ஊரில் ஏராளமான கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் கட்ட ஆரம்பித்தார்.


வழிபாட்டிடங்கள் அவசியம்தான். ஆனால் கல்லூரிகளும் மருத்துவமனைகளும்தான் ஒரு சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வல்லவை என்று சொல்லியிருக்கிறார் சலாவுதீன். யுத்தத்தில் ஒரு வெற்றி என்றால், அதன் அடையாளமாக ஒரு மசூதியாவது, தேவாலயமாவது எழுப்புவது அந்நாளைய மன்னர்களின் வழக்கம்.அதுவும் சிலுவை போர் என்பது ஐரோப்பிய கிறித்துவ மன்னர்கள் பலஸ்தீனத்தை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து இழந்து முஸ்லிம் ஆட்சியாளரான சலாவுதீனிடம் இழந்தும் கூட அந்த வெற்றிக்குப் பின் சலாஹுதீன் ஒரு மசூதியும் எழுப்பியதாகத் தெரியவில்லை. மாறாக இடிக்கப்பட்டிருந்த அரசுக் கட்டடங்கள் பலவற்றைச் சீரமைத்து கல்லூரிகளாகத்தான் எழுப்பினார்.

ஓய்வெடுக்க ஜெருசலேத்திலிருந்து புறப்பட்டு சிரியாவில் உள்ள டெமஸ்கஸுக்குப் (அந்நாளில் திமஷ்க்.) போனவர், அங்கேயே கி.பி. 1193-ம் ஆண்டு உயிர்நீத்தார். அப்போது வரத்து வயது 56 மட்டுமே...
**************************************************************************************

சிரியா மட்டுமே இரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறுவது ஒருதலைப் பட்சமான வாதம். அந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலிடம் தான் அதிகளவு இரசாயன ஆயுதங்கள் உள்ளன. அணுகுண்டு கூட வைத்திருக்கிறது. அது பற்றி யாரும் பேசுவதில்லை. பனிப்போர் காலத்தில் இஸ்ரேலின் எதிரியான சிரியாவுக்கு, சோவியத் யூனியன் ஆயுதங்கள் கொடுத்து பலப்படுத்தி வைத்திருந்தது. இன்று வரைக்கும் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்யாத, அயலில் உள்ள ஒரேயொரு அரபு நாடு சிரியா மட்டுமே. அதனை அகற்றுவது தான் தற்போது தொடங்கியுள்ள அமெரிக்கப் போரின் உள்நோக்கம்.

-நன்றி : கலையரசன்.






0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home