15 September 2013

முஜாஃபர் நகர் கலவரம் நேரடிக் காட்சிகள்!

முஜாஃபர் நகர் கலவரம் நேரடிக் காட்சிகள்! இஸ்லாமியனாக பிறந்து வ...
முஜாஃபர் நகர் கலவரம் நேரடிக் காட்சிகள்!
Aiwa Saudia
இஸ்லாமியனாக பிறந்து விட்ட ஒரு குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றமும் இந்த மக்கள் செய்து விட வில்லை. இன்று சொந்த நாட்டிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். உண்ண உணவில்லை: உடுக்க உடையில்லை: இருக்க இருப்பிடம் இல்லை. அத்தனையையும் இந்துத்வா வாதிகள் எரித்து நாசமாக்கியுள்ளனர்.

குஜராத்தில் எவ்வாறு இன அழிப்பு செயல்படுத்தப்பட்டதோ அதே பாணியை பின் பற்றி இங்கும் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளனர். ஜாட் இனத்தவரின் கிராமத்துக்கு கேமரா மேன் சென்ற போது அந்த மக்கள் 'வெளியிலிருந்து இருட்டான நேரத்தில் ஒரு கும்பலாக ஒரு கூட்டம் வந்து இந்த அழிவை செய்து விட்டு சென்றுள்ளது. உள்ளூர் காரர்கள் யாரும் இந்த இன அழிப்பில் ஈடுபடவில்லை' என்று சொல்கின்றனர். உள்ளூர்காரர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இவ்வளவு பெரிய இன அழிப்பை செய்து விட முடியுமா?

நாட்டு மக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை: எத்தனை உயிர்கள் போனாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும்: மோடியை பிரதமராக்கிப் பார்க்க வேண்டும். சிதறுண்டு கிடக்கும் இந்து ஓட்டுக்களை இது போன்ற கலவரங்களின் மூலம் பிஜேபிக்கு திருப்ப வேண்டும்: என்ற ஒற்றை எண்ணத்திலேயே இந்துத்துவா வாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இது இந்து மதத்தை மேலும் சிக்கலாக்கி அந்த மதத்தை அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்று விடும் என்பதை ஏனோ இவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இந்த ஏழைகளின் கண்ணீர் இந்த அயோக்கியர்களை இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் பிடிக்கும். அதுவரை நாமும் பொறுப்போம்.
-நன்றி சுவனப் பிரியன்

முஜாஃபர் நகர் கலவரம் நேரடிக் காட்சிகள்! இஸ்லாமியனாக பிறந்து வ...
முஜாஃபர் நகர் கலவரம் நேரடிக் காட்சிகள்!
Aiwa Saudia


https://www.facebook.com/photo.php?v=234327956721602

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home