14 September 2013

பெருமையும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியன.





தச்சு வேலை செய்யும் ஒருவனுக்கு மன்னன் மரணதண்டனை நியமம் செய்தான், அன்றைய இரவு தச்சனால் தூங்க முடியவில்லை, அவன் மனைவி அவனுக்கு ஆறுதல் கூறினாள், எல்லா நாட்களையும் போல் இன்றும் உறங்குங்கள், ஏனெனில் இரட்சகன் ஒருவன்தான் இருந்தபோதிலும் அவன் விடிவுக்குப் பல வழிகளை வைத்திருக்கிறான், அந்த வார்த்தைகள் அவனுக்கு சற்று ஆறுதலாக இருந்தன, கண்கள் அயர்ந்து விட்டன.
மன்னின் காவலாளிகள் கதவை தட்டும் சத்தத்தில்தான் அவனுக்கு விழிப்பு வருகிறது, அவனது முகம் வெளிறிவிடுகிறது, கவலையுடன் மனைவியைப் பார்க்கிறான், அவளது வார்த்தைகள் உண்மையாகவில்லையே, நடுங்கிக் கொண்டே கதவுகளைத் திறந்து தன்னைக் கைதுசெய்யுமாறு கைகைளை நீட்டுகிறான், காவலர்கள் சொல்கிறார்கள், மன்னர் இறந்து விட்டார், அவருக்கான சவப்பெட்டியை செய்யுமாறு கேட்கவே வந்துள்ளோம் என்றார்கள்.
அவனது முகம் மலர்ந்தது மனைவியை பார்த்தான் உனது வார்த்தையை நம்பாமைக்கு மன்னித்துவிடு என்று சொல்வது போலிருந்தது அவனது பார்வை, மனைவியிடமிருந்து ஒரு புன்னகை புறப்பட்டது, மீண்டும் கூறினாள் எல்லா நாட்களையும் போல் உறங்குங்கள் இரட்சகன் ஒருவன்தான் ஆனால்... அவனது தீர்வுகள் பல.
மனிதன் யோசித்து யோசித்தே தன்னைக் கஷ்டப்படுத்திக் கொள்கிறான், ஆனால் அல்லாஹ்விடம் அனைத்தும் தங்கியிருக்கிறது.
தனது பதவியை வைத்துப் பெருமையடிப்பவன் பிர்அவ்னை நினைத்துப் பார்க்கட்டும்.
தனது செல்வத்தை வைத்து பெருமையடிப்பவன் காரூனை நினைத்துப் பார்க்கட்டும்.
தனது பரம்பரையை வைத்துப் பெருமையடிப்பவன் அபூ லஹபை நினைத்துப் பார்க்கட்டும்.
பெருமையும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியன.