14 September 2013

"இணையத்தில் அதிகரிக்கும் செக்ஸ் குற்றங்கள் ஒரு பார்வை!!!






இன்றைய உலகில் தற்போது மிக அதிகமாக தவறுகள் நடைபெறும் ஒரே இடம் எது என்றால் அது இணையதளம் நாளுக்கு நாள் இதில் நடைபெறும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனால் தற்போது உலகில் 20 சதவிகித குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தற்போது வெளியான அதிர்ச்சி தகவல். இந்த ஆராய்ச்சியின் முடிவுகளின் படி தற்போது 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 32 சதவிகிதம் பேர் அந்த வயதிலேயே பார்ன் வெப்சைட்டுகளை பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு. மேலும் 14 லிருந்து 16 வயதுடையவர்களில் 56 சதவிகிதம் பேர் பார்ன் வெப்சைட்டுகளை தினசரி பார்கின்றனர், மேலும் இவர்கள் இதைபோல இணையத்தில் அதிகம் பார்ப்பதால் தானும் அந்த மாதிரி செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை படுகின்றனர். அப்போது தான் அவர்களது தேடுதல் ஆரம்பம் ஆகும் பெண்களின் மீது அவர்களது பார்வை வேறு விதமாக மாறும் இதுவரை பார்த்த பார்வைக்கும் தற்போது அவர்கள் பார்க்கும் பார்வைக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். தனது பள்ளி அல்லது கல்லூரி தோழி அல்லது தோழனுடன் அவர்கள் செக்ஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை வரும் நிறைய பேர் அதை செய்தும் பார்த்து விடுகிறார்கள் அவர்களது மனம் மீண்டும் அதற்கு ஏங்கும் போது அவர்களது துணை அதற்கு மறுக்கிறார்கள். அங்குதான் உண்மையிலேயே பிரச்சனை ஆரம்பமாகிறது அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அல்லது போட்டோக்களை காட்டி அவர்களை மிரட்டி படிய வைக்க பார்ப்பார்கள். அந்த முயற்சி 90 சதவிகதம் தோல்வியில் தான் முடிகிறது இதனால் பலர் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை கூட செய்துள்ளனர் என்கிறது அந்த ஆய்வு. இதோ அதற்கு நாம் ஒரு உதாரணத்தையும் பார்ப்போம் கனடாவை சேர்ந்த Rehtaeh Parsons என்ற 17 வயது பெண் தனது நண்பர்கள் இருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை அவர்கள் படம் பிடித்துள்ளனர் மீண்டும் இரண்டாவது முறை அந்த மாணவியை அழைக்கவே அவர் மறுத்திருக்கிறார் பிறகு அவர்கள் போட்டோக்களை காண்பித்து பிளாக் மெயில் செய்து இருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் தற்போது போலீசார் அந்த இரண்டு மாணவர்களையும் கைது செய்து இருக்கின்றனர் .
- oneindia

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home