ஃபிடல் கேஸ்ட்ரோ !!!
!ஆனால் உண்மை. அமெரிக்க ராணுவம் கியூபா மக்களின் சுதந்திர போராட்டத்தின் ஆதரவாக களத்தில் குதித்துஸ்பெயின் நாட்டு ராணுவத்தை கியூபாவிலிருந்து விரட்டி அடித்தது. கியூபா விடுதலை அடைந்ததாகவும்அறிவிக்கப்பட்டது. சுமார் 60 ஆண்டுகள் மாறி மாறி பல்வேறு ஆட்சியாளர்கள் வந்து போனார்கள்.
1952 ஆம் ஆண்டு கண்துடைப்புக்காக தேர்தல் நடத்துவதாக அறிவித்தான் சர்வாதிகாரி பாடிஸ்டா. ஃபிடல் கேஸ்ட்ரோஎன்ற இளம் வழக்கறிஞர் தேர்தலில் குதித்தார். பாடிஸ்டா என்ன நினைத்தானோ… தேர்தலை நிறுத்திவிட்டுஜனாதிபதியாக தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டான். இதை எதிர்த்து அந்த இளம் வழக்கறிஞன் நீதிமன்றம்சென்றான். அன்றைய சட்டமோ சர்வாதிகாரிக்கு கிரிடம் சூட்டியது தோல்வியோடு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தவழகரிஞன் கேஸ்ட்ரோ கருப்பு அங்கியை உதறிவிட்டு புரட்சிக் காரனாக மாறினான்.
1953ஜூலை 26 அன்று மோன் காடாபாரக் தாக்குதல் வழக்கில் 76 நாள்கள் தனிமைச் சிறையில் இருந்துவிட்டு பிறகு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து கேட்டார்:
“நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்யும்போது எத்தனைக் காலமாக அவன் வேலையில்லாமல் இருந்தான் எனக் கேட்பதுண்டா? அவனுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் வாரத்தில் அவன் எத்தனை நாள்கள் உணவு உண்டான்;எத்தனை நாள்கள் பட்டினி கிடந்தான் எனவும் நீங்கள் அவனிடம் கேட்பதுண்டா? நீங்கள் அவனது சமூக சூழ்நிலையைப் பற்றி விசாரிப்பது உண்டா? அதிகம் ஒன்றும் சிந்திக்காமல் அவனை சும்மா சிறையில் தள்ளுவீர்கள்.
ஆனால்,வர்த்தக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் தீ வைத்து காப்பீட்டுத் தொகையைக் கொள்ளையடிப்பவர்கள்,சில மனித உயிர்களும் இதில் சாம்பலாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சிறைக்குப் போகமாட்டார்கள்.இன்சூர் செய்தவர்களிடம் வழக்குரைஞரை நியமிக்கவும் நீதிபதிகளுக்கு இலஞ்சம் கொடுக்கவும் தேவையான பணம் உள்ளது. பட்டினியால் வாடி வதங்கும் ஏழையை நீங்கள் சிறையில் அடைப்பீர்கள்.
ஆனால், அரசின் கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடிக்கின்ற கொடியவர்களில் எவரும் ஓர் இரவு கூட சிறைகளில் கழித்திருக்க மாட்டார்கள். ஆண்டின் இறுதியில் ஏதாவது ஒர் உன்னத கேளிக்கை விடுதியில் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பீர்கள்.அதன் மூலம் அவர்கள் உங்களுடய ஆதரவைப் பெறுகின்றனர்.”
உலக வரைபடத்தில் கியூபா என்கின்ற அந்த குட்டித் தீவுக்கு கிரிடம் சூட்டப் போகும்தானைத் தலைவன் அந்த இளம் வக்கீல் என்று யாரும் அறிந்திருக்கவில்லை.கியூபாவின் விடுதலைக்கு அன்று தோள் கொடுத்த அமெரிக்காவிற்கு, கண்ணில்தைத்த முள்ளாக இந்த குட்டி தீவு மாறுமென்று அமேரிக்கா கூட கனவிலும்நினைக்கவில்லை. ஆம் ! இந்த மாவீரன் கேஸ்ட்ரோவிற்கு வலது கரமாக வந்துசேர்ந்த ‘சே’ என்று உலகம் செல்லமாக அழைக்கும் மாவீரன் சேகுவேராவும்,கேஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய விடாப்பிடியான போராட்டம்தான் இன்றும்அமெரிக்காவிற்கு சவாலாகவும் விடுதலைக்கு போராடும் நாடுகளுக்குஉதாரணமாகவும் விளங்கும், கியுபா என்னும் அந்த தேசம்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் வஞ்சகத்தனமாக தனது சகாவான மாவீரன் சேயை கொன்ற பிறகும் தனது மக்களுடன் இணைந்து இன்று வரை காலத்தையும் வென்றுஅந்த மண்ணின் பெருமையை காத்து வரும் அந்த மாவீரனின் பெருமையை நாமும்போற்றுவோம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home