1 September 2013

உலகை உலுக்கிய விபத்துகள்



ஒவ்வொரு நிமிடமும் உலகில் எங்காவது மூலையில் ஏதாவது விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொரு விபத்துமே இழப்புக்களைத் தருபனவை. உலக சரித்திரத்திலே உயிர்களை அதிகளவில் பலிகொண்ட பல விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும், பணப் பெறுமதி அடிப்படையில் அதிக பொருள் சேதத்தை ஏற்படுத்திய மாபெரும் விபத்துகள் இவை.

டைட்டானிக் கப்பல் விபத்து
டைட்டானிக் திரைப்படம் மூலமாக உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கப்பல் விபத்து 1912 ஆம் ஆண்டு இடம்பெற்றது. கட்டி முடித்த போது உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் தனது வெள்ளோட்டத்தி லேயே பனிப்பாறையுடன் மோதுண்டு கடலுள் சங்கமமானது. 1500 பயணிகளையும் பலியெடுத்த டைட்டானிக் கட்டி முடிக்க ஏற்பட்ட மொத்த செலவு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அப்போதே செலவானது. இப்போதைய மதிப்பில் சுமார் 150 மில்லியன் டொலர்கள்.

வீல்ட்ஹால் விபத்து
ஜெர்மனியின் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வீல்ட்ஹால் பாலத்தின் மீது 32000 லீட்டர் எரிபொருள் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி ஒன்றுடன் கார் ஒன்று மோதியது. 90 அடி உயரமான பாலத்திலிருந்து கீழே ஆட்டோ பான் என்று அழைக்கப்படும் பிரதான பாதையில் வீழ்ந்த எரிபொருள் தாங்கி தீப்பிடித்து எரிந்தது. அந்த வெப்பம் தாங்க முடியாமல் பாலமும் வெடித்தது. தற்காலிகமாகப் பாலத்தை திருத்த ஆனா செலவு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள். மீளப் பாலம் கட்ட ஆன செலவு 318 மில்லியன் டொலர்கள்.

மெட்ரோ லிங்க் விபத்து
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 இல் இடம்பெற்ற மிகக் கோரமான தொடருந்து விபத்து இது. லொஸ் ஏன்ஜெலிஸ் தொடருந்து நிலையத்தில் எதிரும் புதிருமாக இரண்டு தொடருந்துகள் (ரயில்கள்) மிக வேகமாக மோதிக்கொண்டதில் 15 பேர் பரிதாபமாகப் பலியாயினர். மெட்ரோ லிங்க் தொடர்ந்து வந்த பொழுது அதை நிறுத்தும் சமிக்ஞை வழங்க வேண்டிய அதிகாரி எஸ்எம்எஸ் அனுப்புவதில் பிஸியாக இருந்தாராம். உயிர்களின் நஷ்ட ஈடு பொருள் இழப்பு எல்லாம் சேர்த்து இழப்பு 500 மில்லியன் டொலர்கள்.

கி 2 பொம்பர்கள் விபத்து
குவாமில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து மேலெழுந்த அமெரிக்க விமானப்படையினர் கி2 குண்டுவீச்சு விமானம் சமிக்ஞை கோளாறு காரணமாக தலை குப்புறமாக வீழ்ந்து 1.4 பில்லியன் டொலர்களைக் கரியாக்கியது. இதுவரைக்கும் மிக அதிக இழப்பான விமான விபத்தாக இதுவே கருதப்படுகிறது. எனினும் விமானிகள் இருவருமே வெளியே பரஷ¤ட்டில் பாய்ந்து உயிர் தப்பிக்கொண்டனர்.

எச்சன் வல்டஸ் எண்ணெய்க் கசிவு
அமெரிக்காவின் அலாஸ்கா பிராந்தியத்தில் எக்சன் நிறுவனத்துக்கு சொந்தமான வல்டஸ் கப்பல் பவளப்பாறை ஒன்றுடன் மோதியதை அடுத்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் 10.8 மில்லியன் கலன் எண்ணெய் கடலோடு கலந்து வீணாகியது. இது நடந்தது 1989 ஆம் ஆண்டு. எண்ணெய்க் கழிவுகளை சுத்திகரிக்க ஆன செலவு மட்டும் 2.5 பில்லியன் டொலர்.

பைபர் அல்பா எண்ணெய்க் கிணறு விபத்து
1988
இல் ஜூலை மாதம் ஆறாம் திகதி இங்கிலாந்துக்கு சொந்தமான வட கடலில் அமைந்திருந்தன. பைபர் எண்ணெய்க் கிணறுகளில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து முழு எண்ணெய்க் கிணற்றுத் தளத்தையும் எரித்து நாசமாக்கியது. இரண்டு மணித்தியாலங்களில் 16 தொழிலாளர்கள் பலியானதோடு 300 கோபுரங்கள். 100 பாரிய எண்ணெய்க் குழாய்கள் என்று அனைத்துமே சாம்பராயின அந்தக் காலகட்டத்தில் அதிக எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய பைபர் முழுவதுமாக இல்லாது போயிற்று. மொத்த இழப்பு 3.4 பில்லியன் டொலர்கள்.

சலேன்ஜர் விண் விபத்து
அமெரிக்காவினால் 1986 ஆம் ஆண்டு ஏவப்பட்ட சலேன்ஜர் விண்கலம் விண்ணில் எழுந்து 73 வினாடிகளில் வெடித்து சிதறியது. ஒரு சிறிய தொழிநுட்பக் கோளாறு தான் இதற்கான காரணம். எனினும் ஆன செலவோ மொத்தம் 5.5 பில்லியன் டொலர்கள்.

ப்ரெஸ்டீஜ் எண்ணெய்க் கசிவு
கிரேக்க நாட்டுக்கு சொந்தமான ப்ரெஸ்டீஜ் என்ற எண்ணெய்க் கப்பல் ஸ்பானிய, பிரெஞ்சு கடற்கரையோரமாக 2002 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் சந்தித்த மாபெரும் புயல் காற்றே இந்த மிகப் பெரிய எண்ணெய்க் கசிவு விபத்துக்குக் காரணம் 77000 தொன்கள் கொண்ட எண்ணெய்த் தாங்கிகளை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலைப் புயல் தாக்கியதும் சில தாங்கிகள் வெடித்து சிதறின. நடுக்கடலில் கடும் புயலில் மாட்டிக்கொண்ட கப்பலைப் புயல் இரண்டாகப் பிளந்தது. இருபது மில்லியன் கலன் எண்ணெய் கடலிலே வீணாகியது.
இதன் காரணமாக பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பல்லாயிரக் கணக்கான மைல்கள் நீளமான கடற்கரைகள் மாசடைந்து போயின. சேதாரங்களும், சுத்திகரிப்புப் பணிகளுக்கும் ஆன மொத்த செலவு 12 பில்லியன் டொலர்கள்.

கொலம்பியா விண்கல விபத்து
1978
ஆம் ஆண்டில் ஆரம்பமான கொலம்பியா விண்கலக் கட்டுமானப் பணிகளின் மூலம் அமெரிக்கா உலகின் தலை சிறந்த விண்கலத்துக்கு அமைத்த பெருமையை அடைந்தது.
25
ஆண்டுகள் நீடித்த அந்த பெருமை, 2003 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதலாம் திகதி டெக்சாஸ் மாநிலத்தின் வான் பரப்பில் நிகழ்ந்த கொடூர விபத்தோடு இல்லாமல் போயிற்று. விண்கலத்தின் இறக்கைகள் ஒன்றில் ஏற்பட்ட சிறு துவாரம் பெரும் விபத்தை ஏற்படுத்தியது. விண்கலத்தில் ஏன் துவாரம் ஏற்பட்டது என்று ஆராயவே 500 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன. மீள் கட்டுமானப் பணிகளுக்கு மேலுமொரு 300 மில்லியன் டொலர்கள், மொத்த இழப்பு மட்டும் 13 பில்லியன் டொலர்கள்.

செர்னோபில் அணு உலை விபத்து
1986
ஆம் ஆண்டு நடந்த செர்னோபில் அணு உலை விபத்து தான் உலகில் யுத்தங்கள் இல்லாமல் மிகப் பாரிய அழிவை ஏற்படுத்திய சம்பவம். வரலாற்றில் கறை படிந்த நாளாகிப் போன ஏப்ரல் 26,1986 அன்று தான் அப்போதைய சோவியத் யூனியனின் உக்ரைனில் அமைந்திருந்த
செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவு மிக நீண்ட காலம் நீடிக்கக்கூடிய அழிவுகளைத் தந்தது. பல வருடம் கழித்து புற்று நோயினாலும் பலியானோரோடு சேர்த்து 125000 உக்ரைனின் அரைவாசிப் பிரதேசம் அணுக்கசிவின் காரணமாக இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேறிடங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவரானார்கள். 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்றுவரை கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் சேர்த்து இழப்பு வேறெந்த விபத்துமே நெருங்க முடியாத 200 பில்லியன் டொலர்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home