20 October 2013

2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும்



2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர். தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது. நீரின்றி அமையாது உலகு... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது. பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு, ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ஐ.நா மன்றம் மேற்கொண்டுள்ளது

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home