மது குறித்த சிறு வரலாற்றுப்பார்வை
மது குறித்த சிறு வரலாற்றுப்பார்வை: மதுவைக் காய்ச்சி வடிகட்டும் முறை (Distillation)
அன்றைய அரேபிய, பாரசீக, ரோம சாம்ராஜ்யங்களில் நிலவி வந்தது.
இதில் ஒயினை விடவும் கூடுதல் போதை தரும் ‘அல்-கூகுல்’ எனும் திரவத்தைக் கண்டு பிடித்தவர் ஜாபர் இப்னு கையாம் என்பவர். இவர் ஒரு
வேதியல் அறிஞர். இந்த அல்-கூகுலே பிறகு அல்கஹால் என்று அழைக்கப்பட்டது. ஜாபர் இப்னு கையாம் அதை மருந்தாகத்தான் பயன்படுத்தினார். அவரது
நோக்கமும் அதுவே. பிறகு 13-ம் நூற்றாண்டில் இத்தாலிமாண்ட் பெல்லியர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்னால்ட் வில்லோனோவா என்பவர்தான் அதை மதுவாகவும் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார். இன்றைய நவீன மது வகைகள் தோன்றிய
வரலாறு இதுவே. தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பே
மதுவை முறையாக அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள்தான். கைபர், போலன் கணவாய் வழியாக வரும்போதே
சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளையும் கையில் கொண்டு
வந்தார்கள். மது அருந்தாததையே அடையாளமாகக் கொண்டு அசுரர்கள் என்று
தமிழரை அழைத்தார்கள். சுரபானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று
அழைக்கப்பட்டு. சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று
அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home