28 October 2013

வரலாறும், பறவைகளும் நிறைந்த பழவேற்காடு



குளிர்காலம் வந்து விட்டது என்பதை அறிவிக்கும் கட்டியக்காரர்களாக நாடோடிப்பறவைகள் திகழ்கின்றன. இந்திய நாட்டிற்கு இவை இனப்பெருக்கம் செய்யவும், தங்கள் ஊரின் உறைய வைக்கும் குளிரிலிருந்து குளிர்காயவும் வருகின்றன. இவை வந்து தங்கும் நீர்நிலைகள் இந்திய நாடெங்கும் நிறைந்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் பதின்மூன்று நீர்நிலைகள் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்தியாவின் இரண்டாவது பெரும் உப்புநீர் ஏரியான பழவேற்காடு ஏரியாகும். பழவேற்காடு இந்த ஏரியில் உள்ள தீவாகும்.அதையொட்டி இதற்கு பழவேற்காடு ஏரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் இதனை புலிகாட் லேக் (ஞருடுஐஊஹகூ டுஹமுநு) என்று அழைப்பார்கள். பழவேற்காடுக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இங்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மசூதி ஒன்றும், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட ஆதிநாராயண பெருமாள் கோவிலும், நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த டச்சுக்கல்லறைகளும் இங்கு உள்ளன.கலங்கரை விளக்கம், கடலும் ஏரியும் இணையும் அழகிய முகத்துவாரப்பகுதி, ஏரியின் ஊடே செல்லும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.
ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்குள் வருவதும் வந்த நீர் மீண்டும் கடலுக்குள் செல்வதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். சைபீரியா தொடங்கி இமாலயத்தின் உச்சியில் வசிக்கும் பறவைகள் அனைத்தும் இங்கு வந்து கூடுவதால் இதை ஒரு பறவைகள் சத்திரம் என்று கூறலாம். இவ்வாறு இங்கு வந்து தங்கிச் சென்ற பறவைகள் பல, ஏன் பறந்து கொண்டே திரிய வேண்டும் என்று எண்ணி இந்த ஏரியில் குடும்பத்துடன் குடியேறி அதை சொந்த ஏரியாக மாற்றி விட்டன. பூநாரை( குடுஹஆஆஐசூழுடீ), வண்ணநாரைகள் ( ஞஹஐசூகூநுனு ளுகூடீசுமு), கூளக்கடா (குநுடுஐஊடீசூ), கடல் காகம் (ளுநுஹழுருட ), வெள்ளை மற்றும் கறுப்பு கொக்கு, நீர்காகம், குருட்டுக்கொக்கு, மீன்கொத்தி, உள்ளான் ஆகிய பறவைவகைகள் நிரந்தரமாக இங்கு தங்கி விட்டன. கொக்கு வகைகளில் மஞ்சள்கால், மஞ்சள் மூக்கு கொக்கு, கறுப்புக்கால், கறுப்பு மூக்கு கொக்கு, லேசான கொண்டை கொக்கு, சாம்பல் நிறக்கொக்கு ஆகியவற்றை இங்கு எப்போதும் பார்க்கலாம். பருவகாலங்களில் வழக்கம் போல் வந்து போகும் பறவைகளில் நீர்வாத்தும், கூளக்கடாவும் இருக்கும். அவை இங்கிருக்கும் பறவைகளுடன் கலந்து உறவாடி விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச்செல்லும். நீர்வாத்து நன்னீர் பரவியிருக்கும் காலங்களில் ஏராளமாக வரும். கூளக்கடா ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வரத் தொடங்கி டிசம்பர்,ஜனவரி வரை இங்கு தங்கி இருக்கும். இருப்பினும் இவை மார்ச் வரை காணப்படும். விம்ப்ரெல் (றுழஐஆக்ஷசுநுடு) பறவை ஆர்க்டிக் பகுதியில் இருந்து இடைவெளி விடாமல் பறந்து இங்கு வந்து சேருகின்றன. இவை பழவேற்காடு நண்டுகளை உண்ணுவதற்காகவே இங்கு வருகின்றன என்று பறவை ஆர்வலர்கள் கூறுகின்றனர். காஸ்பியன் கடல்பகுதியைச் சேர்ந்த ஆலாக்களும் இங்கு வருகின்றன.சென்ற ஆண்டில் சிறப்பு விருந்தாளிகளாக பட்டைதலை வாத்து, செங்கிளுவை வாத்து ஆகியவை இந்த ஏரிக்கு வந்துள்ளன. இமயமலையில் லடாக் பகுதியைச் சேர்ந்த பட்டைதலை வாத்து வழக்கமாக திருநெல்வேலி கூந்தன்குளம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தன. தற்போது இவை இங்கும் வருகின்றன. செங்கிளுவை வாத்துகள் ஐரோப்பாவில் இருந்து வருகின்றன. கூளைக்கடா, சாம்பல் நாரை, ஊசி வால் வாத்து, நாமக்கோழி, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் உள்ளிட்ட 113 வகை நீர்நிலை பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.
பழவேற்காடு சென்னைக்கு அருகில் 60கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து வடக்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் ஐந்தில் அமைந்துள்ள பொன்னேரியில் அல்லது சூலூர்பேட்டையில் இருந்தும் செல்லலாம். பொன்னேரியில் இருந்து 19 கிலோமீட்டரிலும், சூலூர்பேட்டையில் இருந்து ஐந்து/ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.மீஞ்சூர், திருவொற்றியூர், செங்குன்றம், மூலக்கடை, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநகரப் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த ஏரி ஆந்திரா, தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பரவியுள்ள ஏரியாகும். ஏரியின் மூன்றில் இரண்டு பங்கு தமிழகத்தில் உள்ளது. ஆந்திராவில் உள்ள இதன் முகத்துவாரத்தில் உள்ள தீவு இந்த ஏரியை வங்காள விரிகுடாவில் இருந்து பிரிக்கிறது. இந்த தீவில் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் அமைந்துள்ளது.கடல்நீர்மட்டம் உயர்ந்திருக்கும் போது இதன் பரப்பளவு 460 சதுர கிலோ மீட்டராகவும், கடல்நீர்மட்டம் குறைவாக இருக்கும்போது அது 250 சதுர கிலோமீட்டராகவும் இருக்கும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home