28 October 2013

உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்



இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் மற்றும் தொப்பை  பிரச்னை. அடிவயிற்றில் அதிகமாக சதைப்பிடிப்பு இருந்தால் பெண்களுக்கு உடல் அழகே கெட்டுவிடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும்கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்த வழி.
வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி, பயிற்சி  மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம்  கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது.
தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற  கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. சீசன்கால பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம்கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது. வாழைத்தண்டு, பூசணி, அருகம்புல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு சாற்றினை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.  இஞ்சி  சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்.
இந்த உணவு முறைகளுடன், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பிட்னஸ் பயிற்சியாளர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, பின்பற்றினால் தொப்பை  தொல்லையின்றி வாழலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home