ஆக்ரா கோட்டையில் மழைநீர் சேமிப்பு.
ஆக்ரா கோட்டை அகழியுடன் கூடிய அழகுமிகு
கோட்டை.
பேரரசன் ஷாஜகான், மகன் ஔரங்சீப் அவர்களால் இந்த
கோட்டையில் சிறை வைக்கப்பட்டு தாஜ்மகாலை பார்த்தே இறந்ததாக சரித்திரம் கூறுகிறது.
மழைநீர் சேமிப்பிற்கு சிறப்பான அமைப்புக்களை
ஏற்படுத்தி அந்த காலத்திலேயே யமுனை ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு மேல் நிலை தொட்டிகளில்
நிரப்பி அவற்றிலிருந்து செயற்கை நீருற்றுக்கு நீர் சென்றதாக கல்வெட்டு
கூறுகிறது….
இன்றும் இந்த நீரேற்று முறை புதிர்தான்.
ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் இருந்தபோது யமுனை
ஆற்றிலிருந்து வரும் நீரைத்தான் அருந்துவார். ஆற்று நீர் அந்த காலகட்டங்களில்
குடிப்பதற்கு ஏற்றதாயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மகனுடன் சண்டையிட்ட போது அந்த நீர்
வரும் வழியை
மகன் ஔரங்சீப் மறித்ததால் வேறு வழியின்றி ஷாஜகான் ஜூன் 8 – 1658 வருடம் சரண்டைந்ததாக அங்குள்ள
கல்வெட்டில் உள்ளது.
உலக புகழ்மிக்க தாஜ்மகாலை கட்டிய
பேரரசன் வீழ்ந்த வரலாற்றின் பின்னால் தண்ணீர்தான் இருக்கிறது என்றால் வியப்பாகத்தான்
உள்ளது.
…முத்தமிழன்…
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home