24 October 2013

ரெட் கோன்




ஒரு பெண் தன்னோட கல்யாண நாள் அலங்காரத்திற்காக.. கடையில் கிடைக்கும் ரெட் கோன் என்று சொல்ல கூடிய... ரெடிமெட் மெகந்தியை பயன்படுத்தி கைகளிலும் கால்களிலும் அலங்காரம் செய்து கொண்டார். அவருக்கு அந்த மெகந்தி உடலுக்கு ஒத்துகொள்ளாமல் பொக்கலங்கள் மற்றும் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.. மருத்துவமனையில் பட்ட அவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் அந்த பெண்ணின் பாதிக்கப்பட்ட கை கால்களை நீக்கி விட்டனர்

நண்பர்களே இன்று சாதாரண கடைகளில் கூட இது போல நிறைய தயாரிப்புகள் கிடைகின்றன. பார்ட்டி,விழாக்களில் கலந்து கொள்ளும் போது இது போன்ற தயாரிப்புகளை உபயோக்கிக்கும் பெண்களே கவனியுங்கள், இப்பொழுது வரும் இது போன்ற தயாரிப்புகள் கண்டிப்பாக இயற்கையான மருதாணியில் செய்வது இல்லை. தொழில் போட்டி மற்றும் மார்க்கெட்டை பிடிப்பதற்காக தரமற்ற ரசாயனங்களை உபயோகித்து மலிவு விலையில் கொடுக்கின்றன இதை பயன் படுத்தும் பொழுது அலர்சி ஏற்பட்டு இது போல் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

இதில் பெரும்பாலும் குடிசை தொழில் போல் செய்வதால் வியாபார நிறுவனங்களின் முகவரியோ இல்லை கலக்கப்பட்ட ரசயானகளின் பெயரோ இடம் பெறுவதில்லை . அதனால் பாதிக்கபட்டாலும் நஷ்டஈடு கூட பெற முடியாது.

இயற்கையான அழகுசாதன பொருட்களை உபயோகித்து அழகையும் ஆரோக்கியத்தை பேணுங்கள்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home