24 October 2013

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?



மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பது எப்படி? ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை  மையத்தின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.வினோத் அவர்கள் விளக்கமளிக்கிறார்.

கால் மற்றும் இடுப்பு மூட்டுகள் தேய்மானம் அடைவதால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டு மாற்றவேண்டிய அவசியம்  ஏற்படுகிறது. இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகவும் கவனமாகவும், தொற்று ஏற்படாதவாறும் செய்யப்பட வேண்டிய அறுவை  சிகிச்சை ஆகும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன் தொற்று ஏற்படுத்தக்கூடிய நோய் ஏதும் நமக்கு இருக்கிறதா என்று  பரிசோதித்து பார்க்க வேண்டும்.

உதாரணமாக சொத்தைப்பல், சிறுநீர் தொற்று போன்றவை இருப்பின் முதலில் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு பின் அது குணமானவுடன் மூட்டு  மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த தொற்றானது இரத்தம் வழியாக விரைவாக பரவி ஆபத்தை  ஏற்படுத்தக்கூடியதாகும். எனவே கவனம் தேவை. அதுபோல் அறுவை சிகிச்சை செய்யப்படும் அறுவை சிகிச்சை கூடம் நவீன வசதிகளையும், கிருமி  நீக்கம் செய்யப்பட்டதாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

முன் எச்சரிக்கையாக கவனமாக பார்த்துக்கொண்டாலும் சில சமயம் தொற்று ஏற்பட்டு விடலாம். அப்படி தொற்று ஏற்பட்டுவிட்டால் கவலைப்பட  வேண்டாம். அதையும் சரி செய்ய முடியும். அதாவது கிருமித் தொற்று ஏற்பட்ட மூட்டை அகற்றி விட்டு அதற்கு பதிலாக மறு மூட்டு மாற்று அறுவை  சிகிச்சை செய்து வேறு ஒரு மூட்டு பொருத்தப்படும். அதை இரண்டு படிகளில் சரி செய்யலாம். ஆனால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை  செய்வது கடினமானது தான்.

முதல்படியில் தொற்று ஏற்பட்ட மூட்டிலிருக்கும் செயற்கை மூட்டு, எலும்பு சிமெண்ட், மூட்டைச்சுற்றியுள்ள சதைப்பகுதி, மூட்டின் கடைசி பகுதி  ஆகியவற்றை அகற்றி நன்றாக சுத்தம் செய்யப்படும். பின்பு பாதிக்கப்பட்ட கிருமி தொற்றுக்கு ஏற்ப கிருமி எதிர்ப்பு சக்தியுள்ள மருந்தை மூட்டில் பூசப்படும் சிறப்பு எலும்பு சிமெண்ட்டுடன் கலந்து இரண்டு எலும்புகளுக்கு நடுவில் பொருத்தி பூசப்படும். தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு கிருமி எதிர்ப்பு  மருந்து இரத்தநாளம் வழியாக செலுத்தி கிருமித் தொற்று கட்டுப்படுத்தப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பின்பு சிமென்ட்டை அகற்றி விட்டு வேறு  ஒரு சிறப்பான செயற்கை மூட்டு பொருத்தப்படும்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு 24 மணி நேரம் காலை அதிகமாக அசைக்காமல் வைத்திருக்கும் போது கணுக்காலிலோ அல்லது  கெண்டைக்காலிலோ இரத்தம் உறைய நேர்ந்தால் அது உடனே நுரையீரலைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக  அமையலாம். அதைத் தடுப்பதற்கு தொடர்ந்து ஊசி போடப்படும். அது தவிர 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை காலை அழுத்தி விட்டு  இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தம் உறைந்து விடாதபடி செய்யப்படும். அதற்கு பிரத்யேக நவீன கருவி நியுமேட்டிக் கம்ப்ரஸன் டிவைஸ்  பயன்படுத்தப்படுகிறது.

இந்த கருவியுடன் கூடிய உறை காலில் அணியப்பட்டிருக்கும். அந்த உறையானது காலை அழுத்தி பின் விரிவடையும். அவ்வாறு செய்வதால் இரத்தம்  உறையாமல் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கென்றே  பிரத்யேக மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். நவீன காற்றோட்டமான கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை கூடங்கள் இருக்கின்றன.

கிருமி நீக்கம் செய்யப்பட்ட நவீன கருவிகளால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உலகத்தரம் வாய்ந்த செயற்கை மூட்டுகள் பொருத்தப்படுகின்றன.  கிருமித் தொற்று ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன. மருத்துவக் குழுவினர் அனைவரும் பாதுகாப்பான கவச  உறைகள் அணிந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்வதால் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home